ஊழியம் விவரிக்கப்படுதல் MINISTRY EXPLAINED 50-07-11 தமிழாக்கம்: சகோ. S. A. ஜெபகுமார் வில்லியம் மரியன் பிரன்ஹாம ஊழியம் விவரிக்கப்படுதல் இந்தச் செய்தியானது சகோதரன். வில்லியம் மரியன் பிரான்ஹாம் அவர்களால் 1950-ம் வருடம், ஜூலை மாதம், 11-ம் தேதி, மினியாபொலிஸ், மினிசோட்டா, அமெரிக்காவில் அளிக்கப்பட்டது. ஒலிநாடா ஒலிப்பதிவிலிருந்து அச்சிடப்பட்ட ஆங்கில புத்தகத்திலிருந்து ஏட்டிதழின் பக்கத்திற்கு சொல்வடிவமான செய்தியாக மாற்ற ஒவ்வொரு முயற்சியும் துல்லியமாக செய்யப்பட்டு, இப்புத்தகம் முழுமையாக அச்சிடப்பட்டு, இலவசமாக விநியோகிக்கப் படுகின்றது. ஊழியம் விவரிக்கப்படுதல் MINISTRY EXPLAINED மினியாபொலிஸ், மினிசோட்டா, அமெரிக்கா சகோ. லின்ட்ச்சே அவர்களே, உமக்கு நன்றி. சபையோரே, மாலை வணக்கம். ஐரோப்பாவிலிருந்து திரும்பி வந்தது முதற்கொண்டு என்னுடைய முதலாவது கூட்டத்தைத் துவங்கும்படியாக இங்கே நமது தேசத்தின் இந்த அழகான இடத்தில் இருப்பதென்பது இன்றிரவிலே ஒரு மகத்தான சிலாக்கியமாயுள்ளது. இன்றிரவில் சற்றே களைப்பாக உள்ளது... நாங்கள் வாகனத்தை கடினமாக ஓட்ட வேண்டியிருந்தது. நாங்கள் அப்படியே நியூயார்க்கிலிருந்து வீட்டிற்கு வரும்படியாக நேரிட்டு, உடனடியாக மிகத் துரிதமாக சரியாக இங்கேயே புறப்பட்டு வந்து விட்டோம். இங்கே இருப்பதும், ஏற்கனவே மற்ற கூட்டங்களில் நாங்கள் சந்தித்த நண்பர்களில் சிலரை, குறிப்பாக சகோதரன் ரிச்சி மற்றும் சகோதரன் ஹால் ஆகியோரை சந்திப்பதும் மிகவும் சந்தோஷமாக உள்ளது. நாங்கள் நியூமெக்ஸிகோவிலுள்ள கார்ல்ஸ்பாட்டில் சகோதரன் ஹால் அவர்களை உடையவர் களாயிருந்தோம், நான் அவரை நேசிக்கும் விதமாக மிக நன்றாக அறிந்துகொண்டேன், மேலும் ஹøஸ்டன் கூட்டத்தில் சகோதரன் ரிச்சி அவர்களையும் உடையவர் களாயிருந்தோம். மேலும் அது ஒருவிதத்தில் வீட்டில் வருவது போல் உணரச்செய்கிறது. அப்படியானால் ஏற்கனவே இந்த அற்புதமான ஐக்கியத்திற்கான உணர்ச்சியை உணருகிறோம், ஏன், நல்லது, அது அப்படியே ... போன்று தோன்றுகிறது. தீர்க்கதரிசி ஒருமுறை, 'பெருமழையின் இரைச்சலை கேட்கிறேன்' என்று கூறினான் என்று நம்புகிறேன். எழுப்புதல் நடக்கும் இந்த வரவிருக்கிற நாட்கள் முழுவதும் அது அந்தவிதமாகவே இருக்கும் என்று நான் நம்புகிறேன். 2. நான் எப்போதுமே மினியாபோலிஸிற்கு வரும்படியான வாய்ப்பை, இன்னும் சரியாகச் சொன்னால், சந்தர்ப்பத்தை விரும்பினேன். நான் இங்கே வரும்படியாக, ஏறக்குறைய கடந்த மூன்று அல்லது நான்கு வருடங்களாகவே காலங்கடத்திக் கொண்டு வந்தேன். அது எப்போதுமே ஏதோவொரு இடமாக இருந்து, நாங்கள் வேறு ஏதோவொரு இடத்திற்கு கடந்துசென்று, மினியாபோலிûஸ தவறவிட வேண்டியதாயிற்று. நாங்கள் வந்து கொண்டிருந்து தான் இருந்தோம் என்பதை நான் அறிந்து கொண்ட போது, ஏன், நான் நிச்சயமாகவே அதன்பேரில் குதூகலமடைந்தேன். நான் சற்று களைப்பாயிருக்கிறேன், நான் இப்பொழுது தான் என்னுடைய விடுமுறை நாட்களை விட்டு திரும்பி வருகிறேன், கூட்டமானது அதனுடைய சரியான வகையான நிலைக்கு வருவதற்கு எங்களுக்கு ஒரு இரவோ அல்லது அவ்வண்ணமான இரவுகளோ ஆகலாம். ஒரு காரியம் என்னவென்றால், இங்கேயுள்ள எங்களில் அநேகமானோருக்கு இது புதிதாக உள்ளது என்று நினைக்கிறேன், இன்னும் சரியாகச் சொன்னால், உங்களில் அநேகருக்கு அவ்வாறு உள்ளது என்று நினைக்கிறேன். மேலும் வேறொரு காரியம் என்னவென்றால், நான் இதன் பேரில் அவ்வளவு துரிதப்பட வேண்டியிருந்தது... நான்-நான் எவ்வாறு முயற்சிக்கிறேன் என்பதை அநேக ஜனங்கள் அறிந்துள்ளபடி, நான் ஜெப வரிசைகளைத் துவங்குவதற்கு முன்பாக, வழக்கமாக மூன்று நாட்கள் உபவாசித்து ஜெபிக்கிறேன்... இங்கேயுள்ள எத்தனை பேர் இதற்கு முன்பு, ஆராதனைகளில் ஒன்றில் இருந்திருக்கிறீர்கள்? உங்கள் கரத்தைப் பார்ப்போம். நல்லது, அது அப்படியே அற்புதமாயுள்ளது. 3. இப்பொழுது, இங்கே துவங்கும்படியாக அப்படியே நேரத்தோடே வீட்டிற்கு வந்து சேர்ந்த பிறகு, இந்த நேரத்திலே, நல்லது, நான் அவ்வாறு மூன்று நாட்கள் உபவாசித்து ஜெபிக்கவில்லை. நான் அப்படியே சற்று... இருக்கலாம். நாம் ஒருவிதத்தில் முதலாவது இரவுக்காக அல்லது அவ்விதமான இரவுக்காக நம்முடைய நேரத்தை எடுத்துக்கொள்ளலாம். நான்... செய்கையில் நீங்கள் என்னோடு சகித்துக் கொண்டு. என்னோடு கூட ஜெபிப்பீர்கள் என்று நிச்சயமுடையவனாயிருக்கிறேன். இந்தக் கூட்டத்தில் தேவையுள்ளவர்களுக்காக ஊழியம் செய்யவும், யாவருக்கும் ஜெபிக்கும்படியாகவும் தேவனுடைய ஒத்தாசையைக் கொண்டு என்னால் கூடுமான எல்லாவற்றையும் செய்வேன்... போல அது இருக்கும் என்று நம்புகிறேன். வியாதியுள்ளவர்களுக்காகவும் தேவையுள்ளவர்களுக்காகவும் ஜெபிப்பதிலே கர்த்தர் எனக்கு மிகவும் நல்லவராக இருந்து வருகிறார். 4. ஐரோப்பாவிலிருந்து திரும்பினது முதற் கொண்டு, இது என்னுடைய முதலாவது கூட்டமாகும். நான் அப்படியே கொஞ்சம் மிகுதியாக... மிகவும் உரத்த சத்தமாக அல்ல, சகோதரன் ஹால் அவர்களே... நான்-நான் ஒருவிதத்தில் சிறிது, நான் துவக்க முதலே மிக உரத்த சத்தமாக பேசுவது கிடையாது. மேலும் அப்படியானால் ஒரு கூடாரத்தில் அது ஒருவிதத்தில் கடினமாக ஆகிவிடுகிறது. ஆனால் நான்... இது நான் எப்பொழுதாகிலும் ஒரு கூடாரத்தில் சுகமளிக்கிற ஆராதனையைக் கொண்டிருப் பதிலேயே என்னுடைய இரண்டாவது முறை யாகும். என்னுடைய முதலாவது எழுப்புதலானது ஒரு கூடாரத்தில் நிகழ்ந்தது, அது ஏறக்குறைய இதைப் போன்ற ஏதோவொன்றாக இருந்தது, அது சரியாக நான் மனமாற்றம் அடைந்த பிறகு நடந்தது. அந்த நெசவு துணி பறந்து கொண்டிருப்பதைக் கேட்க நான் எப்போதுமே விரும்பினதுண்டு. அதைக் குறித்த ஏதொ வொன்றைப் போன்று இது காணப்படுகிறது, ஆபிரகாம் அங்கு ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களில் தங்கியிருந்த போதுள்ளதை நான்-நான் எண்ணிப் பார்க்கிறேன். அவர்கள் இராஜ்யத்திற்கு சுதந்தரவாளிகளாயிருக்கிறார்கள், எனவே நாம் அவனுடைய குமாரர்களாயிருக்கிறோம். நாம் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களாயிருந்தால், ஆபிரகாமின் சந்ததியாராகவும் வாக்குத்தத்தத்தின்படி சுதந்தரவாளியாகவும் இருக்கிறோம். 5. இப்பொழுது, ஒவ்வொரு இரவும், நான் புரிந்துள்ளபடி, கர்த்தர் நம்மை அனுமதிப் பாரானால், கூட்டமானது பன்னிரண்டு இரவுகள் நீண்டதாக இருக்கும். ஒவ்வொரு இரவையும் நாம் எண்ணிக்கையில் எடுக்க நாம் முயற்சிக்க விரும்புகிறோம். நான் உபவாசித்து ஜெபித்துக் கொண்டிருக்கையில், இப்பொழுது முதல் சில இரவுகளுக்காக, முதலாவது இரவு அல்லது இரண்டு இரவுகளுக்காக... கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எனக்கு அனுமதி கொடுத்திருக்கிற இந்த ஊழியமானது (நான் இதை தாழ்மையாக கூறுகிறேன்), சற்றே விநோதமானது, இது ஒருக்கால் வழக்கமாக இருக்கிற உங்களுடைய சுகமளிக்கும் கூட்டங்களிலிருந்து சற்றே வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் நான் செய்யும்படி அவர் எனக்கு கட்டளையிட்டிருக்கிறபடி மாத்திரமே என்னால் செய்ய முடியும். வேறு எவரையும் போன்று, அதைச் செய்யும்படி அவர் கூறினவண்ணமாகவே அப்படியே நாங்கள் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். அது சற்று வினோதமாக நடைபெறுகிறது, ஏனென்றால் அது ஒரு... இயற்கைக்கு மேம்பட்ட ஜீவனின் வழிகாட்டுதலின் கீழாக இருக்கிறது. அது-அது முழுவதுமாக ஒரு அதிசய சம்பவமாக - இன்னும் சரியாகச் சொன்னால், அவர்கள் உங்களிடம் சொல்லியிருக்கிற, அதிசய சம்பவங்களாக இருக்கிறது. அது நிச்சயமாக வெளிப்படையாகவும் நேரடியாகவும் வியாதிகளையும், உங்களுடைய ஜீவியத்திலுள்ள பாவங்களையும் கூறி, நீங்கள் வியாதிப்படுவதற்கு ஏன் காரணம் என்றும், என்ன காரணம் என்றும் உங்களிடம் கூறும். நீங்கள் அப்படியே அதைச் சரி செய்கிறீர்கள், ஏன், ஜனங்கள் சுகமடையும்படியாக இதுவரை அது தவறிப்போனதாக நான் ஒருபோதும் கண்டதேயில்லை. மேலும் அந்த... அநேக நேரங்களில் அதைக் குறித்த பலவீனமான பாகமானது ஜனங்கள் சுகமடைவதற்கு பின்பாக உள்ள விசுவாச குறைபாடு என்ற பாகம் தான். மேடையின் மேல், இங்கே தெய்வீக வரத்தின் முன்பாக, அது எதையும் விடுவிக்கும். எந்த... அவர்கள் எவ்வளவு மோசமாக ஊனமுற்றிருந்தாலும், குருடாயிருந்தாலும், திருகின உறுப்புடையவர் களாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அவர்கள் இங்கே மேடையிலேயே சுகமடைந்து விடுவார்கள். 6. ஆனால் இப்பொழுது, அநேக நேரங்களில் அது என்னை... நிலைக்கு கொண்டு வந்து விடுகிறது. அது எவ்வளவு காலம் நீடித்திருக்கிறது? அவர்கள், 'நல்லது, ஒரு சில நாட்களில், அவர்களில் பெரும்பாலான நோயாளிகள் சரியாக திரும்ப அவர்களுடைய பழைய நிலைமைகளுக்கே போய் விடுகிறார்கள்' என்று கூறுகிறார்கள். அப்பொழுது அவர்கள் அது தன்வயப்படுத்தும் வசீகர சாஸ்திரம் (ஹிப்னாடிஸம்) என்றும் அதைப் போன்ற மற்றவைகள் என்றும் கூற முயற்சிக்கிறார்கள், சத்துரு எப்போதுமே தேவனுக்கு விரோதமாகக் கூறுவதற்கு ஏதோவொன்றை வைத்திருக்கிறான் என்பதை புரிந்துகொள்ளும்படியான அந்தக் காரியங்களைக் குறித்து கிறிஸ்தவர்களாகிய நாம் சோம்பலுள்ளவர்களாக இல்லை. நாம் அதை எதிர்பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். துன்புறுத்தல் இல்லாமல் ஜீவியத்தினூடாக போகலாம் என்று நாம் எதிர்பார்ப்பது கிடையாது, 'கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்' என்று வேதாகமம் கூறுகிறது. நான் நேர்மையாக மாத்திரமே இருக்க முடியும். ஒரு நபர் நேர்மையாக இருந்து, உண்மையாகவும் நேர்மையுடனும் இருப்பாரானால், தேவன் உங்களோடு கூட இருப்பார். ஒரு மனிதன் எதையாகிலும் கூறினால், நல்லது, நாம் சுயாதீன சித்தம் உடையவர்களாயிருக்கிறோம், நமக்கு விருப்பமான எதையும் நம்மால் கூற முடியும். ஆனால் நான் எதையாவது கூறி, அது சரியாக இல்லாவிட்டால், தேவன் அதைக் குறித்து சாட்சிபகர மாட்டார். ஆனால் நான் தேவனைக் குறித்து ஏதாவதொன்றை, தேவன் செய்த ஏதாவதொன்றைக் கூறி, பிறகு தேவனும் சுற்றிலும் திரும்பி வந்து, அது சரி என்று உறுதிப் படுத்துவாரானால், அப்பொழுது நீங்கள் அதை விசுவாசித்தாக வேண்டும், ஏனென்றால் தேவன் அவ்வண்ணமாகக் கூறியிருக்கிறார், ஒரு மனிதனல்ல. எந்த சபையோருக்கும் அது மாத்திரமே நியாயமாக இருக்கும். அதுவே உரிமைகோரப்பட்டதாக இருக்கிறது. 7. நானாகவே செய்யக்கூடியது எதுவுமேயில்லை, மற்ற சகோதரர்களைப் போலவே நான் வெறுமனே கிருபையால் இரட்சிக்கப்பட்ட பாவியான ஒரு-ஒரு மனிதன் தான். மேலும் அது... நான் மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பத்தில், பக்தியற்றவனாக வளர்க்கப்பட்டவன். எனக்கு முன்புள்ள என்னுடைய ஜனங்களும், என்னுடைய தாத்தா பாட்டிகளும் கத்தோலிக்கர்களாக இருந்தார்கள். என்னுடைய தகப்பனாரோ தாயாரோ எந்த சபைக்குமே ஒருபோதும் போனதே கிடையாது. நாங்கள் வம்சாவழியாக, இன்னும் சரியாக சொன்னால், நாட்டினனாக ஐயர்லாந்தைச் சார்ந்தவர்கள். நாங்கள் சபைக்குப் போனதில்லை. நான் ஏறக்குறைய ஏழு வயதான ஒரு சிறிய பையனாக இருந்தது மட்டுமாக, அல்லது நான் முதலாவது பிறந்த போது, நான் பிறந்த போது அந்தக் காலையில் மிகவும் அசாதாரணமான காரியம் சம்பவித்தது. ஒரு ஒளியானது அந்த அறைக்குள் வந்தது. அப்போது அவர்கள் எல்லாரும் அழத் தொடங்கினார்கள். மேலே நான்... இருந்த அந்த மலைகளில். கென்டக்கி, அங்கே தான் நான் பிறந்தேன். ஏழு வருடங்கள் கடந்து சென்றது. ஏழாவது வயதில், என்னிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு சத்தமாக அது முதல் தடவையாக எனக்கு தோன்றி, ஒருபோதும் புகைப்பிடிக்கவோ, அல்லது மது அருந்தவோ, அல்லது எவ்விதத்திலும் என்னை நானே கெடுத்துக்கொள்ளவோ கூடாது என்றும் ஏனென்றால் நான் பெரியவனாகும் போது, நான் செய்யும்படியாக ஒரு வேலை உள்ளது என்றும் என்னிடம் கூறினார். 8. ஜீவியத்தில் அதற்கு பிற்பாடு அது தொடர்ந்து தோன்றிக் கொண்டிருந்தது. அது எனக்குக் காரியங்களைக் காண்பிக்க, அது என்னிடம் கூறினவைகளை நான் அப்படியே சொல்லுவேன். இருப்பினும் அது சம்பவிக்க ஒருபோதும் தவறினதில்லை. 1947, இன்னும் சரியாகச் சொன்னால், 1946, ஏப்ரல் - மே மாதம் 7-ம் தேதி, அறையில், கர்த்தருடைய ஒரு தூதனானவர் அறைக்குள் வந்தார். நான் அந்த மனிதனைக் கண்ட போது, அது... அவர் உரைத்தபோது, எனக்கு அவரைத் தெரியாது. அவர்... அவரைக் கண்டது, எப்பொழுதாவது அவரை மனித ரூபத்தில் கண்டது அதுவே முதல் தடவையாகும். அது அநேக தடவைகளில் தோன்றினது. என்னுடைய முதலாவது எழுப்புதலுக்குப் பிறகு, கீழே நதியில், அது குறிப்பிட்ட தூரத்தில் இருந்த போது, அது ஒரு நட்சத்திரத்தைப் போன்று - ஒரு உருவில் இறங்கி வந்தது, ஆனால் அது அருகில் வந்தபோது, அது ஒரு ஒளியைப் போன்று தோன்றினது. மேலும் அது ஒரு... அது தோன்றினபோது, அநேக ஜனங்கள் மயக்கடைந்தார்கள், அங்கே சில பத்தாயிரம் ஜனங்கள் அதைக் காணும்படியாக அங்கே இருந்தார்கள் என்று நினைக்கிறேன். அதன்பிறகு அது அப்படியே... அதற்கு என்ன அர்த்தம் என்று எனக்கு ஒருபோதும் தெரியாமலிருந்தது. 9. அதற்குப் பிற்பாடு, அவர் என்னைச் சந்தித்த போது, செய்ய வேண்டியது என்னவென்றும், வியாதிப்பட்ட ஜனங்களுக்காக போய் ஜெபிக்கும் படியாகவும் என்னிடம் கூறினார். அவர்கள் என்னை நம்ப மாட்டார்கள் என்று நான் அவரிடம் கூறினேன். அவர், 'தீர்க்கதரிசியாகிய மோசேக்கு கொடுக்கப் பட்டது போன்று, உனக்கு அடையாளங்கள் கொடுக்கப்படும். அவன் - ஜனங்களை விடுவிக்கும்படியாக தேவன் மோசேயை அனுப்பினார் என்பதை ஜனங்களுக்கு நிரூபிக்கும்படியாக மோசேக்கு இரண்டு அடையாளங்கள் கொடுக்கப்பட்டது போன்று, அவ்வண்ணமாகவே நான் விடுவிக்கும்படி... இரண்டு அடையாளங்கள் கொடுக்கப்பட்டது. அவைகளில் ஒன்று உடனடியாக வந்தது, நான் உத்தமமாக இருந்தால், மற்றொன்று கூடவே பின்தொடரும்' என்று கூறினார். எனக்குத் தெரிந்தபடி, அது எவ்வாறு சம்பவிக்கிறது என்று இன்றிரவு இங்கேயுள்ள உங்களில் அநேகருக்குத் தெரியும். முதலாவது வியாதிகளை... ஒருவிதத்தில் வியாதிகளைப் பகுத்தறிய வேண்டியதாயிருந்தது. அதன்பிறகு அது ஒருபோதும் தவறிப்போகாத நிலையான ஒரு பரிபூரண விதத்தை அடையும் வரையில் நான் அதைச் செய்தேன். அதன்பிறகு அது ஜனங்களுடைய இருதயங்களிலுள்ள இரகசியங் களை, ஜீவியத்தில் அவர்கள் செய்த காரியங்களை, ஜீவிய பிரயாணம் முழுவதும் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் செய்த காரியங்களை, அவர்களிடம் கூறுவதை ஆரம்பித்தது, இப்பொழுது உங்களில் அநேகர் அதைக் குறித்து தடுமாற்றமடைந்து, அதைத் தவறாகப் புரிந்து கொள்ளலாம். 10. ஆனால் இதை ஞாபகம் கொள்ளுங்கள், நாத்தான்வேல் இயேசுவிடம் வந்தபோது, அவனுடைய சகோதரனாகிய பிலிப்பு சென்று நாத்தான்வேலைக் கண்டபோது, நாசரேத் தூரிலிருந்து நன்மையான எதுவும் வர முடியாது. அவன் அவரிடம் வந்தபோது. அவன் ஜெபவரிசையில் இருந்தபோது, இயேசு அவனிடம், 'இதோ, கபடற்ற இஸ்ரவேலன்' என்று கூறினார். அதற்கு அவன், 'ரபீ, நீர் என்னை எப்போது அறிந்தீர்? நீர் என்னை எப்போது அறிவீர்?' என்று கேட்டான். அவர், 'பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே நீ மரத்தின் கீழிருந்த போதே, நான் உன்னை அறிந்தேன்' என்றார். அதற்கு அவன், 'நீர் தேவனுடைய குமாரன், இஸ்ரவேலின் இராஜா' என்றான். அவரை ஏற்றுக்கொள்ளும்படியாக அவனுடைய இருதயம் ஆயத்தமாயிருந்தது. 11. கிணற்றண்டையிலிருந்த ஸ்திரீயிடம், இயேசு அவளிடம் பேசிக் கொண்டிருந்த போது. அவர், 'போய், உன்னுடைய புருஷனை அழைத்து வா' என்றார். அதற்கு அவள், 'எனக்கு புருஷன் கிடையாது' என்று கூறினாள். அவர், 'நீ சரியாகக் கூறினாய், உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள், இப்பொழுது உனக்கு இருக்கிறவன் உன்னுடைய புருஷனல்ல' என்று கூறினார். அவள், 'நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மேசியா வருவாரென்றும், அதைப் போன்றவைகளையும் நாங்கள் அறிவோம்' என்று கூறிவிட்டு, அவள் பட்டணத்திற்குள் போய், பட்டணத்தின் மனுஷர்களிடம், 'நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் கூறின ஒரு மனிதரை வந்து பாருங்கள். இது அதே கிறிஸ்து அல்லவா?' என்று கூறினாள். 12. இப்பொழுது, கிறிஸ்தவ நண்பர்களே, நாமெல்லாரும் நித்தியத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் ஜனங்களாயிருக்கிறோம். இங்கேயிருக்கும் நம்மில் ஒவ்வொருவரும் ஏதோவொரு நாளில் தேவனைச் சந்தித்து, அவர் எதிரில் நிற்க வேண்டியவர் களாயிருக்கிறோம். நம்முடைய ஜீவியங்களில் நாம் செய்திருக்கிற செய்கைகளுக்காக நாம் கணக்கொப்புவிக்கப் போகிறோம். இப்பொழுது, நான் ஒரு கொள்ளைக்காரன் என்றும், ஜான் டிலிங்கரின் ஆவி என்மேல் இருப்பதாகவும் உங்களிடம் கூறினால், நல்லது, நான் துப்பாக்கிகளை வைத்திருந்து, அந்த விதமான ஒரு குணாதிசயத்தைக் கொண்டிருப்பேன் என்று என்னை எதிர் பார்ப்பீர்கள், ஏனென்றால் அவனுடைய ஆவி என்மேல் இருந்தது. ஒரு ஓவியனின் ஆவியை, ஏதோவொரு மகத்தான புகழ்மிக்க ஓவியனின் ஆவியை நான் உடையவனாயிருக்கிறேன் என்று நான் உங்களிடம் கூறினால், சூரியன் மறையும் நேரத்தில் அலைகள் விழும்போது, அலைகளுடைய காட்சியை கவர்ந்துகொண்டு, அதை ஏறக்குறைய உயிரோட்டமான நிறத்தில் வெளிக்கொண்டு வரக் கூடும் என்று என்னை எதிர்பார்ப்பீர்கள். ஒரு ஓவியனின் ஆவியை என்னில் நான் உடையவனாயிருந்தால், நான் ஒரு ஓவியனின் வேலையைச் செய்திருப்பேன். நாம் கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிருந்தால், அப்பொழுது நாம் கிறிஸ்துவின் கிரியைகளைச் செய்திருப்போம். மேலும் அவர் மேலிருந்த ஆவியாகிற அவர், 'இன்னும் கொஞ்ச காலத்தில் உலகம் என்னைக் காணாது; ஆயினும், நீங்களோ என்னைக் காண்பீர்கள், நான் உங்களோடும், உங்களுக்குள்ளேயும் காலத்தின் முடிவுபரியந்தம் இருப்பேன்' என்றார். 13. ஒரு...ஐயும் நீங்கள் அறிந்துகொள்ள நான் விரும்பியிருக்கவே மாட்டேன். (ஒலிநாடாவில் காலியிடம்) அவர்கள் என்னை ஒரு மத வெறி பிடித்தவன் என்று வகைப் படுத்துகிறார்கள், நான் ஒரு மதவெறி பிடித்தவனாக இருப்பது மிக நல்லது என்று நினைத்திருப்பேனா என்றல்ல, ஆனால் நான் பிரதிநிதியாக நிற்கிற சுவிசேஷத்தின் நிமித்தமாகத்தான், நீங்கள் என்னை உங்கள் சகோதரனாக அறியவேண்டுமென்றே நான் விரும்புகிறேன், ஒரு தெய்வீக சுகமளிப்பவனாக அல்ல. அது வெறுமனே செய்தித்தாள்கள் மற்றும் வார மாத பத்திரிகைகள் கூடுதலாக சேர்த்துக்கொண்ட ஒரு பெயர் தான். தெய்வீக சுகமளிக்கிற ஒருவர் யாருமே கிடையாது. எந்த மனிதனாலும் உங்களைச் சுகப்படுத்த முடியாது. அங்கே... தேவ குமாரனாகிய கிறிஸ்துவும் கூட, ஒரு தெய்வீக சுகமளிப்பவர் என்று உரிமை கோரவில்லை. அவர், 'கிரியைகளைச் செய்வது நானல்ல; எனக்குள் வாசமாயிருக்கிற என் பிதாவானவரே, அவர்தான் கிரியைகளைச் செய்கிறார்' என்றார். எனவே நமது அன்பார்ந்த இரட்சகராகிய இயேசுவே, ஒரு சுகமளிப்பவர் என்ற புகழ்ச்சியை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பாரானால், நாம் எவ்வளவு அதிகமாக சுகமளிப்பவன் என்ற அந்த நன்மதிப்பை ஏற்க மறுக்க வேண்டும். நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க மாத்திரமே செய்கிறோம். நீங்கள் சுகமடைவது விசுவாசம் தான். விசுவாசத்தின் மூலமாகத்தான் நீங்கள் சுகமடைகிறீர்கள். இப்பொழுது, நீங்கள் விசுவாசத்தை உடையவர்களாக இருக்க முடிவதற்கு முன்பே... அநேக ஜனங்கள் ஒருவிதத்தில் தற்செயலாகத்தான் விசுவாசத்தை நோக்கி வருகிறார்கள் என்பதை நான் கண்டுகொள்கிறேன், நீங்கள் அந்த சொற்றொடரை மன்னிப்பீர்களானால், அவர்கள் ஒருவிதத்தில் அதை யூகித்துக்கொள்பவர்களைப் போன்று தான் வருகிறார்கள். ஜெப வரிசைக்குள் வருகிற ஜனங்களில் 90 சதவீதம் பேர் விசுவாசத்திற்குப் பதிலாக நம்பிக்கையைத் தான் கொண்டிருக்கிறார்கள். 14. இப்பொழுது, நம்பிக்கை என்பது ஒரு காரியமாகவும் விசுவாசம் என்பது வேறொரு காரியமாகவும் இருக்கிறது. விசுவாசம் என்பது ஒரு நிச்சயமான புலனாகும். அது ஒரு யூகமல்ல; நீங்கள் வெறுமனே அதை கற்பனை செய்து பார்ப்பது கிடையாது. அது உங்களுடைய சரீரத்திலுள்ள மற்ற எந்த புலன்களையும் போன்று அவ்வளவு நிஜமாகவும், பார்வை இருப்பது போன்று அதேவிதமாகவும் உள்ளது. பார்வை என்பது நிஜமானது. கேட்டலும் நிஜமானது. இந்தச் சரீரத்தைக் கட்டுப்படுத்தும் சரீரத்தின் ஐந்து புலன்களாகிய, பார்த்தல், ருசித்தல், உணர்தல், நுகர்தல், மற்றும் கேட்டல், ஆகியவைகளில் எதுவும் காயப்படாமல் இருக்குமானால், அவைகள் உங்களுக்கு உண்மையான இயற்கைத் திறன்களாக இருக்கிறது. அதன்பிறகு, விசுவாசமும் மற்ற ஐந்து புலன்களில் எதையும் போன்று அவ்வளவு நிஜமாகவும், அதிக உண்மையாகவும் உள்ளது, ஏனென்றால் அது அந்த ஐந்து புலன்களுக்குள்ளும் அவைகளுக்கு மேலாகவும் போகும். இப்பொழுது, தெய்வீக சுகமளித்தலுக்கு முதலும் அடிப்படையுமான காரணம் என்னவென்றால், தேவன் தம்முடைய வேதாகமத்தில் அவ்வண்ணமாக சொல்லியிருப்பதின் நிமித்தமாகத்தான். அது மாத்திரம் தான்... அது நிச்சயமான அஸ்திபாரமாயுள்ளது, அதுதான் தேவனுடைய வார்த்தையாக உள்ளது. 15. மேலும் இப்பொழுது, நான் இன்றிரவு பேசிக் கொண்டிருக்கையில், இவ்வாறு நினைக்கிறேன், நான் முதலில் இக்கூட்டத்தை புதிதான ஒரு விதத்தில் துவங்கும்படி முயற்சிக்கப் விரும்புகிறேன், என்ன சம்பவித்துக் கொண்டி ருக்கிறது என்று ஜனங்கள் உணருவதற்கு முன்பாகவே, அப்படியே நான் வழக்கமாக செய்வதைப்போன்றோ, மூன்று அல்லது நான்கு இரவுகளை எடுத்துக்கொள்வதைப்... போன்று துரிதமாகவோ நுழைவதற்கல்ல. நீங்கள் அவர்களுடைய விசுவாசத்தை கட்டியெழுப்புவீர்களானால், தேவனுடைய வார்த்தையாகிய அஸ்திபாரத்தின் மேல் முதலாவது நிலை நிறுத்துங்கள், அதைத்தான் நான் நம்புகிறேன், அப்பொழுது, சரியாக இங்கே மினியாபொலிஸில் (Minneapolis) இதுவரை நமக்குக் கிடைத்துள்ளவைகளைக் காட்டிலும் சிறந்த பலன்கள் இருக்குமென்று நான் நம்புகிறேன். நான் அதை ஐரோப்பாவில் முயற்சி செய்பார்த்தேன், அது அற்புதமாக கிரியை செய்தது. அநேக நேரங்களில்... என்னுடைய கடைசி இரவிலே பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலமாக பேசிக் கொண்டிருக்கையில், அநேக அநேக நூற்றுக்கணக்கான ஜனங்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டார்கள். வெறுமனே அவர்கள் கண்டபோது, ஒரே நேரத்தில் வாலிப ஜனங்களில் எத்தனை நூற்றுக்கணக்கானவர்கள் என்பதை மறந்து விட்டேன். விசுவாசம் என்பது கேட்பதினால், வார்த்தையைக் கேட்பதினால் வருகிறது. இப்பொழுது, தேவனுடைய வார்த்தையானது சாத்தானை எந்த அடிப்படையிலும், என் இடத்திலும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் தோற்கடிக்கும். தேவனுடைய வார்த்தையானது... 16. எப்போது இயேசு... அவர் தேவனுடைய குமாரனாக இருந்தார் என்பதை நாமெல்லாரும் விசுவாசிக்கிறோம். அது சரிதானா? நாம் அவரை தேவனுடைய குமாரனாக ஏற்றுக்கொள்கிறோம். அவர் ஒரு மனிதனைக் காட்டிலும் மேலானவராக இருந்தார்; தேவன் இயேசுவுக்குள் இருந்தார். தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து உலகத்தை தம்மோடு ஒப்புரவாக்கிக்கொண்டார். அவர் ஒரு தேவன்-மனிதராக (God-man) இருந்தார், தேவன் அவர் மூலமாக கிரியை செய்துகொண்டிருந்தார். இப்பொழுது, ஆனால் அவர் சாத்தானைச் சந்தித்தபோது, அல்லது சாத்தான் அவரைச் சந்தித்தபோது, அவருக்குள் பரலோகத்தின் (Heaven) சகல வல்லமைகளும் வாசமாயிருந்தது, அவைகள் அவருக்குள் இருந்தன என்று நான் விசுவாசிக்கும், அவருடைய அருமையான வரங்களில் எதையுமே அவர் உபயோகிக்கவில்லை. ஆனால் சத்துருவை தோற்கடிக்க அவைகளில் எதையும் அவர் ஒருபோதும் உபயோகிக்கவேயில்லை. அவர் சாத்தானைச் சந்தித்தபோது, சாத்தான் அவரைச் சோதித்தான். அவர், 'மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் பிழைக்க மாட்டான் என்று எழுதியிருக்கிறதே' என்று தான் சொன்னார். அதன்பிறகு ஆலயத்தின் கூரான மெல்லிய கோபுரத்தின் மேல், அவர் மறுபடியுமாக தேவனுடைய வார்த்தையைக் கொண்டே அவனைச் சந்தித்தார். அவன் அவரை மேலே மலையில் கொண்டுபோனபோது, அவர் மறுபடியுமாக அவனை தேவனுடைய வார்த்தையைக் கொண்டே சந்தித்தார், அவ்வண்ணமாக தேவனுடைய வார்த்தையானது சத்துருவை எந்த இடத்திலும், எங்கும், எந்நேரமும் தோற்கடிக்கும் என்பதை நமது திருஷ்டாந்தமாக, நமக்குக் காண்பித்துக் கொண்டிருந்தார். எழுதியிருக்கிறதே. 17. நீங்கள் ஜெபிக்கப்படுவதற்காக இருக்கும் போதும் அதுவேதான், நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்றும், நீங்கள் தேவனை ஏற்றுக்கொள்வது எப்படியென்றும் முதலில் நீங்கள் புரிந்து கொண்டாலொழிய ஒரு ஜெப வரிசைக்குள்ளாக வர வேண்டாம். சமீபத்தில், சரியாக இங்கே உலகத்திலேயே மிகப்பெரிய மருத்துவமனையில், மேயோ சகோதரர்கள் (மருத்துவர்கள்) தீராதநோயுடைய நோயாளியாக என்னைப் புறக்கணித்து விட்டார்கள். வாழ்கை முடிந்துவிட்டது என்றும், ஒருபோதும் முடியாது என்றும், இனி பிரயோஜனமில்லை என்று சொல்லிவிட்டார்கள். அப்போது எனது வாழ்க்கையே பாழாகிவிட்டதோ என்று நினைத்தேன், உலகத்திலேயே மிகச்சிறந்தவர்கள் ஆயிற்றே. அவர்கள் என்னை வெளியே அனுப்பின போது, நான் ஒரு நம்பிக்கையற்ற, உதவியற்ற சிருஷ்டியாக இருந்தேன். ஓ, நான் அவரை நேசிப்பேன், இந்த மிக நீண்ட நாளும் நான் ஜீவித்துக் கொண்டிருக்கிறேனே. அப்போது அவர் என்னைச் சந்தித்தார். விசுவாசத்தினாலே தான், நான் அவரை விசுவாசிக்கிறேன். இன்றிரவிலோ, எப்பொழுதாவது என்னுடைய ஜீவியத்தில் எனக்கிருந்த எடையைக் காட்டிலும் அதிக எடையை உடையவனாகவும், என்னுடைய ஜீவியத்தில் நான் எப்பொழுதும் இருந்ததைக் காட்டிலும் மிக நல்ல ஆரோக்கியத்தோடும் இருக்கிறேன். ஏன்? காரணம் என்னவென்றால் விசுவாசம் கேட்பதினால் வருகிறது, வார்த்தையைக் கேட்பதின் மூலமாக வருகிறது. இயேசு லூக்காவில், 'உங்களுக்கு விருப்பமான காரியங்கள் எதுவாக இருந்தாலும், நீங்கள் ஜெபிக்கும்போது, அவைகளைப் பெற்றுக் கொள்வீர்கள் என்று விசுவாசியுங்கள்' என்று சொல்லியிருக்கிறார். அவ்விதமாகத்தான் காரியங்கள் இருக்கின்றன. 18. வார்த்தையின் ஒழுங்கைக் கவனியுங்கள், நீங்கள் - அதைப் பெறுவீர்கள், அது கிடைக்கும். முதலாவது, நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டீர்கள் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அது உங்களுக்குக் கொடுக்கப்படும். நீங்கள் வந்து, உங்கள் அறிக்கையைச் செய்து, தேவனை விசுவாசித்து, அவர் அதைச் செய்வார் என்று விசுவாசிக்கும்போது, அதைச் செய்ய அவர் கடமைப்பட்டிருக்கிறார். தேவன் தம்முடைய வார்த்தையைக் காட்டிலும் அதிக விலை மதிப்புடையவரல்ல. எந்த மனிதனும் தன்னுடைய வார்த்தையைக் காட்டிலும் எந்த அதிக விலைமதிப்பும் உடையவனல்ல. தேவனோ தவறிப்போவதில்லை. அவரால் பொய்யுரைக்க முடியாது. அவருடைய வார்த்தை உண்மையாக இருக்கிறது. நாம் வெறுமனே அவருடைய வார்த்தையின் மூலமாக அவரை ஏற்றுக்கொண்டு அதை விசுவாசிக்கிறோம். அது சம்பவித்தாக வேண்டும். 19. புற்றுநோயினால் மிகச்சிறந்த மருத்து வர்களால் புறக்கணிக்கப்பட்ட நோயாளிகளை நான் கண்டிருக்கிறேன். அவர்களில் சிலர் பிறவியிலேயே குருடானவர்களாகவும், வலிப்பு நோயுடைய பிள்ளைகளாகவும், எல்லாவித வடிவங்களிலும் கோணலானவர்கள் (twisted). அவர் மேடையிலேயே அவர்களை விடுவிக்க எப்பொழுதாகிலும் தவறிப்போன ஒரு நேரத்தையும் நான் ஒருக்காலும் கண்டதில்லை. இப்பொழுது, அது சரியே. ஏன்? அவர் தேவனாயிருக்கிறார். அவர் தம்முடைய வார்த்தையில் எடுத்துக் கொள்ளப்படும்போது, யாவும் கூடும். நாம் அதை விசுவாசித்து, நம்முடைய திடமான விசுவாசத்தின் பேரில் செயல்படுவோமானால், அது சம்பவிக்கும். 20. முதலாவது, அது - சுகமடைவது தேவனுடைய சித்தம் தானா என்பதை நாம் கட்டாயம் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். கூட்டங்களிலே அதன்பேரில் கொஞ்ச நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும், அநேகமாக மேலாளர்கள் அதைச் செய்வார்கள், சுகமடைவதற்கான தேவனுடைய சித்தத்தின் பேரில், இயேசு எவ்வாறு சுகமளிக்க மரித்தார் என்றும், சுகமளிக்க முதலாவது எவ்வாறு அதிகாரம் கொடுக்கப்பட்டது என்றும். அவர் சீஷர்களை வெளியே அனுப்பினபோது, முதலாவது காரியமாக அவர், 'வியாதியஸ்தர்களைச் சொஸ்தப்படுத்துங்கள்; குஷ்ட ரோகிகளைச் சுத்தப்படுத்துங்கள்; மரித்தோரை எழுப்புங்கள். இல - இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்' என்றார். அது அவர் கொடுத்த முதலாவது அதிகாரம், மத்தேயு 10. மாற்கு 16, கடைசியாக கொடுக்கப்பட்ட அதிகாரம், 'உலகமெங்கும் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசிக் கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்' என்றார். ஏன்? உலகமெங்கும். 'என் நாமத்தினாலே அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள்; அவர்கள் புது பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள் அல்லது சாவுக்கேதுவானவைகளைக் குடித்தாலும் அவர்களைச் சேதப்படுத்தாது; அவர்கள் வியாதியஸ்தர் மேல் தங்கள் கைகளை வைப்பார்களானால், அவர்கள் சொஸ்தமடைவார்கள்.' காரியம் என்னவென்றால், அது பலப்பரீட்சைக்கு வரும்போது, கிறிஸ்தவர்களாகிய நாம் மிக பலவீனமாக ஆகிவிடுகிறோம். அது உண்மை என்றால், அது உண்மை தான். அது உண்மை இல்லை என்றால், அது உண்மையல்ல. நான் அவரை என்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசியாமலும் அது உண்மை என்பதை அறியாமலும் இருந்தால், நான் இன்றிரவு இங்கே இருந்திருக்க மாட்டேன். ஆனால் நான் அதை விசுவாசிக்கிறேன். அது மட்டுமல்ல, அது உண்மை என்பதையும் நான் அறிவேன். பாருங்கள்? நான் ஆயிரக்கணக்கான இடங்களுக்கும் அதிகமாக அதை கண்டுவிட்டேன். 21. அவர்-அவர் அந்த இரவிலே என்னைச் சந்தித்து என்னிடம் சொன்னபோது, நான்-நானோ சாதாரணமான ஆரம்ப பள்ளி கல்வியை உடையவனாக இருக்க, நான் எப்படி இந்த உலக ஜனங்களைச் சந்தித்து, அந்த வரத்தை எடுத்துச்செல்லப் போக முடியும்? அவர், 'நான் உன்னோடு கூட இருப்பேன்' என்றார். நான், 'அவர்கள் என்னை நம்ப மாட்டார்கள்' என்றேன். அவரோ, 'உனக்கு இரண்டு அடையாளங்கள் கொடுக்கப்படும்' என்றார். இப்பொழுது, அந்த அடையாளங்கள் சுகப்படுத்துவதில்லை என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்; அந்த அடையாளங்கள் சுகமடைவதற்கான விசுவாசத்தை அதிகரிக்கும். ஆனால் விசுவாசத்தின் மூலமாக மாத்திரமே அது சுகமடைகிறது. விளங்குகிறதா? பாருங்கள், புரிகிறதா? அடையாளங்கள் விசுவாசத்திற்கு மாத்திரமே கிரியை செய்கிறது. மேலும் இப்பொழுது, மோசே, இஸ்ரவேல் புத்திரரை விடுவிக்கும்படி தேவன் தன்னை அனுப்பினதாக அவன்போய், அவர்களிடம் சொன்னபோது, அவன் இரண்டு அடையாளங்களை செய்தாள். அவன் தன்னுடைய கரத்தை தன் மார்பினுள் இட்டு, அதை வெளியே எடுத்தபோது, அது குஷ்டரோகமாக இருந்தது, திரும்ப அதை தன்னுடைய மார்பினுள் இட்டபோது அது மறுபடியும் சுகமானது. அவன் தன்னுடைய கோலை கீழே போட்டபோது, அது ஒரு சர்ப்பமாக ஆனது, அதை எடுத்தபோது, அது திரும்பவும் ஒரு கோலாக மாறிவிட்டது. அப்பொழுது இஸ்ரவேலர் மோசேயை விசுவாசித்தார்கள். இப்பொழுது, சிந்தனைகளையும், ஜனங்களுடைய இருதயத்தையும், அவர்கள் செய்த காரியங்களையும் அறியும்படி கொடுக்கப்பட்ட இந்த அடையாளங்கள், மனிதன் மூலமாக உண்டானது அல்ல; அது கீழே இறங்கி அதை வெளிப்படுத்துகிற தேவனுடைய ஆவியினாலே உண்டானதாகும் அது கூட்டத்தினூடாக சுழன்றபடி வரும் மகத்தான ஒளியாக அநேக நேரங்களில் கூட்டத்திற்குள்ளே வருகிறது. 22. சமீபத்தில், ஹியூஸ்டனில் என்று நம்புகிறேன், அவர்கள் அதை ஒரு புகைப்படமாக எடுத்தனர், ஒரு புகைப்படம் எடுப்பவர் அதை புகைப்படம் எடுத்தார். உங்களில் அநேகர் என்று நினைக்கிறேன்... அந்தப் புகைப்படத்தை எத்தனை பேர் எப்பொழுதாவது கண்டிருக் கிறீர்கள்? நாங்கள் உங்கள்...ஐ பார்க்கட்டும். ஓ, உங்களில் அநேகர்... அங்கே அதுதான் அந்தப் பாகம்... சுகமளிப்பது அந்த ஒருவர் தான். நானல்ல; நான் வெறுமனே ஒரு வாய்க்கால் மட்டுமே. பெதஸ்தா குளத்தைப் போன்று, சுகமளித்தது அந்தத் தண்ணீரல்ல; தண்ணீரின் மேலிருந்த அந்த தூதனானவர் தான் சுகமளித்தது. சுகமளிப்பது மனிதனல்ல; அம்மனிதனின் மேலுள்ள தேவனுடைய ஆவியானவர் தான் சுகமளிப்பவர். புரிகிறதா? நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா? இப்பொழுது, உங்களில் யாரையும் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த ஒரு நபரும் கேட்டுக்கொண்டிருக்கும் இக்கூட்டத்தில் இருப்பதை நான்-நான் காணவில்லை. உங்களுக்கு என்ன தவறுள்ளது என்பது எனக்குத் தெரியாது என்பதை தேவன் அறிவார், ஒன்றும் தெரியாது. ஆனால் அபிஷேகத்தின் கீழாக, அப்படியே அவர்களுக்கு என்ன தவறுள்ளது என்றும், அவர்கள் தங்களுடைய ஜீவியத்தில் ஒருக்கால் அந்த வியாதிக்கு காரணமாயிருப்பதாக என்ன செய்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படாமல் இந்த மேடைக்கு ஒருவரும் வரமுடியாது (புரிகிறதா?). 23. இப்பொழுது, அது எதற்காக என்றால், அந்த நோயாளியின் விசுவாசத்தைக் கட்டியெழுப்பவே. நான் முயற்சிக்கிறேன், நான் ஐரோப்பாவில் இருந்தபோது, முயற்சிசெய்து சொல்லவும் செய்தேன், என்னால் கூடுமானவரையில், நான் அப்படியே கட்டுப்படுத்திவைக்க முயற்சிக்கிறேன், ஏனென்றால் என்னால்... முடியாது. என்னால் எழுந்து நிற்கவே முடியாத அளவுக்கு அது என்னை மிகவும் பலவீனமடையச் செய்கிறது. இந்த ஜனங்களில் அநேகர் அறிந்துள்ளபடி, சில சமயங்களில் அவர்கள் என்னை மேடையிலிருந்து சுமந்து செல்கிறார்கள், அப்படியே இந்த இதே ஜீவனை உங்களைவிட்டு வெளியே எடுத்துவிடுகிறது. இன்றிரவு நாம் இங்கேயிருக்கையில், நான் ... நம்பிக்கையாக இருந்தேன். ஜெபம்செய்ய துவங்குவதற்கு முன்பே, நான் அதை ஜனங்கள் புரியும்படி சொல்லுவேன், அப்பொழுது நீங்கள் புரிந்துகொள்வீர்கள். என்னிடம் தவறு எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை; அது என்னை புண்படுத்துவதில்லை; சிறிது நேரத்திலேயே நான் அதிலிருந்து வெளியே வந்துவிடுகிறேன். ஆனால் அது குறையத் தொடங்குகிறது. அது அவ்வாறு ஆகும்போது, அது விசேஷ அம்சங்களையும், எல்ôவற்றையும் மாற்றிவிடுகிறது. என்னைச் சுற்றிலும் யார் இருக்கிறார்கள் என்றும், அதைக்குறித்த எதுவுமே எனக்குத் தெரியாது. நோயாளி மேடைக்கு வருகிறார், மற்றும் ண்ச்... 24. நீங்கள் சரியாக இப்பொழுதே வந்து உங்களுக்கு விசுவாசம் இருந்தது என்று என்னிடம் சொல்லுங்கள், அப்பொழுது நான் உங்களை நம்புவேன். நான் உங்கள் வார்த்தையை ஏற்றுக்கொள்வேன், ஏனென்றால் நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்றும், உங்களுக்கு விசுவாசம் உண்டு என்பதையே நீங்கள் அர்த்தப் படுத்துகிறீர்கள் என்றும் நான் விசுவாசிக்கிறேன். ஆனால் சிலசமயங்களில் உங்களுக்கு விசுவாசம் இருப்பதாக நீங்கள் வெறுமனே நினைக்கும்போது, உங்களுக்கு விசுவாசம் இருப்பதாக நீங்கள் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் இப்பொழுது, உங்களுக்கு விசுவாசம் இருந்தது என்று நான் நம்புவேன். ஆனால் அந்த அபிஷேகத்தின் கீழ், அது-அவர்களுக்கு விசுவாசம் இருக்கிறதா அல்லது இல்லையா என்று உங்களுக்குத் தெரியும். அவர்களுக்கு விசுவாசம் இல்லை என்றால், உங்கள் நோயாளி இங்கே கீழேயும், இங்கேயிருக்கும் நீங்களோ இங்கு மேலேயும் இருப்பதைப் போன்று காணப்படுகிறது. அவர்கள் இங்கே கீழேயிருந்து தங்களுக்கு விசுவாசம் உண்டு என்று சொல்ல, ஆனால் அவர்களோ இங்கே மேலே தான் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா? ஆனால் நோயாளியின் அந்த விசுவாசமானது இங்கே அதிகரிக்கும்போது, அப்பொழுது, அது என்னவாக இருந்தாலும் பரவாயில்லை, சரியாக அங்கே மேடையிலேயே விடுவிக்கப்படாமல் போனதை என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் நான் கண்டதில்லை அது சரியே, தேவன் என்னுடைய நியாயாதிபதியாக இருக்கிறார். செய்தித்தாள் நிரூபர்கள், சுற்றிலும் ஏறக்குறைய அவ்வளவு பெரிதான சிறு கால்கள் சுகமடைவதையும், அவைகளை அளப்பதையும் மற்றும் அதைப்போன்றவைகளையும் காணும் போது, மேடைக்குக் குதித்து சத்தமிடுவதைக் கண்டிருக்கிறேன். மேலும் திரிகிப்போய், இழுக்கப்பட்ட சரீரத்தை உடைய சிறு பிள்ளைகள் அப்படியே சுகமடைந்தவர்களாய் வெளியே வந்து மேடையை விட்டு நடந்துபோவதைப் பார்த்து ஜனங்கள் மயக்கமடைவதையும் மற்றும் எல்லாவற்றையும்; ஊனமுற்றவர்களும், மரித்தவர் களும் கூட மரித்தவர்களாய் சாலையோரங்களில் கிடந்த பிறகு சரியாக எழுப்பப்படுவதையும் மற்றும் அதைப்போன்ற மற்றவைகளையும்... அவர்கள் பார்ப்பதை நான் கண்டிருக்கிறேன். 25. இப்பொழுது, எனக்கு இதனோடு எந்த சம்பந்தமும் இல்லாதிருந்தது. இயேசு இன்றிரவில் இக்கூடாரத்திற்குள் நடந்துவந்து, நியாயத்தீர்ப்பில் பதிலளிக்கும்படியாக நம்மெல்லாருக்கும் அழைப்பு விடுவாரானால், எனக்குக் கிடைக்கும் வெகுமானத்தைக் காட்டிலும் மிகப்பலவீனமான பரிசுத்தவான்கள் அதிக வெகுமானத்தைப் பெறுவார்கள் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது, அது-அது என்னுடைய இருதயத்தின் கீழிருந்தே வருகிறது. தாழ்மையாக இருக்க வேண்டுமென்று நான் அதைச் சொல்லிக் கொண்டிருக்கவில்லை; நான் என்னுடைய இருதயத்திலிருந்தே அதைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன், ஏனென்றால் நான்... ஜனங்களாகிய நீங்கள் துன்பப்பட்டது போன்று நான் துன்பப்பட்டிருக்கவில்லை, நீண்டகாலமாக கூட வந்து கொண்டிருக்கிற உங்களில் அநேகர் அந்தவிதமாக இருக்கிறீர்கள். என்னுடைய ஊழியமானது... நேரத்தில், நான் பாப்டிஸ்டு சபையில் எழுந்த ஒரு பிரச்சனையாகத்தான் இருந்தேன். இந்த வரமானது எனக்குக் கொடுக்கப்பட்டபோது, ஏன், எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று தாங்கள் நினைத்ததாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள்; நான் என்ன சாப்பிட்டேன் என்றும், எனக்கு ஒரு பயங்கரகனவு வந்ததா? என்றும் அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான் அதை மெச்சவில்லை, அவர்கள் என்னை நம்பாமல், 'ஆரம்ப பள்ளி படிப்பு படித்த நீயா உலகமெங்குமுள்ள ஜனங்களுக்கு பிரசங்கம் பண்ணுவாய்? நீ வீட்டிற்குத் திரும்பி ஓடிப் போய்விடுவதுதான் நல்லது,' என்று அதைப்போன்று சொன்னார்கள். 26. நல்லது, நான் அவர்களுக்கு தேவையில்லாதிருந்தேன், முழு சுவிசேஷ ஜனங்களோ, 'அந்த வரம் எங்கள் சபைக்கு வருவதற்காக நாங்கள் ஜெபித்துக்கொண்டு வருகிறோம்' என்றனர். அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள். அந்த நேரம் வரையில் நான் எப்போதுமே மற்ற குழுவினரால் வெறுக்கப்பட்ட ஒருவனாகவே இருந்து வந்தேன். இறுதியில் எனக்கு பொருத்தமான இடத்திலுள்ள ஜனங்களைக் கண்டுபிடித்தேன். என்னுடைய ஜீவியம் முழுவதுமே, எனக்கு பொருத்தமான வகுப்பினரை என்னால்-என்னால் கண்டுபிடிக்க முடியாதது போன்றே எனக்குத் தோன்றியது. நான் ஒரு பையனாக இருந்தபோது, நான் புகைபிடிக்கவோ மது அருந்தவோ செய்யவில்லை என்னபதால், வாலிப ஜனங்கள் என்னோடு எந்த சம்பந்தமும் வைக்கவில்லை, எனவே... மேலும் வாலிப பெண்கள் எல்லாரும், நான் வாலிப பெண்களோடு போய்க் கொண்டிருந்த போது, அவர்கள் நடனங்களுக்குப் போவார்கள், நானோ நடனங்களுக்குப் போவதில்லை. எனவே நான் சமூக நிகழ்வுகளில் பங்கேற்காத ஒருவனாகவே இருந்தேன். நான் இரட்சிக்கப்பட்டபோது, உள்ளார்ந்த உணர்வு சார்ந்த ஒரு பழமைப்பாணியிலான மார்க்கத்தில் நம்பிக்கை உடையவனாயிருந்தேன். இந்நிலையில் அந்த சபையோ அதை நம்பவில்லை. நான் ஒரு மதவெறியார்வம் கொண்டவன் என்று அவர்கள் நினைத்தார்கள், மேலும்... நல்லது, நான்... ஒரே சிறகுள்ள பறவைகள்... இறுதியாக நான் சரியான இடத்திற்குள்ளே வந்து விட்டதாக நினைக்கிறேன். மேலும் நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். எனவே நாம் ஒன்றாக மகிமையில் இருப்போம் என்று நான் விசுவாசிக்கிற கூட்டத்தினரோடு கூட இருப்பதற்காக மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன். 27. இப்பொழுது, இது அதைக்குறித்த பகுத்தறிதலுக்குள்ளாக, அந்த நபர் வர, அவர்களைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, அப்பொழுது அது அவர்களிடம் சொல்லத் தொடங்குகிறது. அவர்கள் சரியான விசுவாசத்தோடே வருவார்களானால், அங்கே செய்ய வேண்டியது எதுவுமில்லை. அப்பொழுது அது அப்படியே சரியாக அங்கே மேலேயிருக்கிறது. ஆனால் இப்பொழுது, உதாரணமாக ஒரு கூட்டத்தை எடுத்துக்கொள்கிúற், ஒரு இரவில்... நான் அப்படியே ஒருவிதத்தில், ஒரு வகை கூட்டத்தின்... நான்-நான் போமாண்டில் நடந்த கூட்டத்தை எடுத்துக்கொள்கிறேன். சகோதரன் ரிச்சி அவர்களே, நீங்கள் அங்கே இருந்தீர்கள், போமாண்ட்டிலும் ஹியூஸ்டனிலும் நீங்கள் இருந்தீர்கள் தானே? சரி, போமாண்ட் கூட்டத்தின் கடைசி கூட்டத்தை நான் எடுத்துக்கொள்கிறேன், அதனால் கூட்டம் எப்படி செயல்படுகிறது என்ற ஒரு கருத்தை நீங்கள் ஒருவிதத்தில் கொண்டிருக்கலாம். நாங்கள் வெளிநாட்டிற்குப் போவதற்கு சற்று முன்பாக, தற்செயலாக... 28. நாங்கள் உள்ளே நுழைந்தோம். அநேக இரவுகளில் ஆராதனைகள் நடந்து கொண்டிருந்தன; நாங்கள் ஹியூஸ்டனில் இருந்தோம். அங்கேயிருக்கும் சகோதரன் ரிச்சி அவர்களை உங்கள் எல்லாருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். நாங்கள் ஹியூஸ்டனில் ஒரு மகிமையான கூட்டத்தை உடையவர்களாயிருந்தோம். அதன்பிறகு முடிப்பதற்காக நாங்கள் போமாண்டிற்கு வந்தோம், ஏனென்றால் அதற்கு மேலும் எங்களுக்கு எந்த இடமும் கிடைக்கவில்லை. மக்கள்நெருக்கம், அல்லது ஏதோவொன்று, அந்த அடுக்கு இருக்கை அரங்கு நிறையப்போவதாக இருந்தது, ஹியூஸ்டனில் ஜனங்களுக்காக எங்களிடம் எந்த இடமும் இல்லாதிருந்தது. "மேலும், ஹூஸ்டனிலிருந்து போமாண்ட் (Beaumont) நகருக்கு மக்களை அழைத்து வருவதற்காக, பல பெட்டிகளைக் கொண்ட ஒரு முழு ரயிலையே அவர்கள் இதற்காக ஏற்பாடு செய்தார்கள் (sponsored)." அந்தக் கூட்டத்தில், நாங்கள் உள்ளே நடந்துபோனபோது, நாம் வழக்கமான கூட்டங்களில் செய்யும்விதமாக ஒரு ஜெப வரிசையானது அங்கே அமைக்கப்பட்டிருந்தது. நாங்கள் ஒவ்வொரு நாளும் மிக அநேக ஜெப அட்டைகளை விநியோகித்தோம். அதைக்குறித்த கடினமான பாகம் என்னவென்றால், சற்றே ஒருசில நோயாளிகளுக்குப் பிறகு, ஜீவனே என்னிடமிருந்து போய்விடுகிறது, அவர்கள் என்னை வரிசையிலிருந்து கொண்டுசெல்ல வேண்டியிருக்கிறது. அதன்பிறகு என் சகோதரர் களும் சுற்றிலுமுள்ளவர்களும், மேலாளர்களும் அதைக் கவனித்துக் கொள்கிறார்கள். நாங்கள் ஜெப அட்டைகளை விநியோகிக்கிறோம். அதன்பிறகு நாங்கள் அப்படியே அவைகளிலிருந்து - அந்த அட்டைகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணை தெரிந்துகொண்டு, மேடைக்கு அழைக்கத் தொடங்குகிறோம். இரண்டு அல்லது மூன்று பேர்கள் மேடையிலிருந்து வந்திருந்தார்கள். உங்களுக்கு ஒரு அட்டை இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் க்ஷங்ண்ய்ஞ்-ஜெபிக்கப்படுவதற்காக மேலே மேடைக்கு வந்துகொண்டிருந்தார்கள். அப்பொழுது நான் அப்படியே நோக்கிப் பார்க்க நேர்ந்தது, அவர்கள் இவ்விதமாக ஒரு-ஒரு ஆம்புலன்ஸ் தூக்குப்படுக்கையை கீழே கொண்டுவந்து கொண்டிருந்தார்கள். அம்மனிதன் காண முடியாதபடி முழுவதுமாக மூடப்பட்டிருந்தான், நான் வெறுமனே அவனுடைய முகத்தை மட்டும் கண்டேன். 29. மேலும் இப்பொழுது, இதெல்லாமே தரிசனத்தின் மூலமாகத்தான் காணப்பட்டன. எல்லாமே தரிசனத்தின் மூலமாகத்தான். நீங்கள் ஜீவியத்தில் என்ன செய்திருக்கிறீர்கள் என்று நான் காணும்போது, நான் அப்படியே காண்கிறேன் - அப்படியே அதைக் காண்கிறேன். ஆனால் இப்பொழுது உங்களைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்றுதான் அது இருக்கிறது. நான் ஒரு சிறு பையனாக இருந்தது முதற்கொண்டு ஒரு அளவிலே அது அவ்விதமாகத்தான் இருந்துவருகிறது. எனவே, நீங்கள் இந்த உலகத்தில் வரங்களோடு கூட பிறப்பதால், வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதல் இல்லாமலே இருக்கின்றன என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் ஒரு இசைக்கலைஞராக இருக்கவே பிறந்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். சிலசமயங்களில் நீங்கள் பிள்ளைகளை எடுத்து சகலவிதமான இசை கல்வியையும் அவர்களுக்கு கொடுத்தாலும், அவைகள் ஒருபோதும் ஒரு இசைக்கலைஞனை உருவாக்குவதில்லை. தங்களுடைய அஆஇ-களை துவக்கம் முதல் முடிவு வரைக்கும் வாசிக்கவோ, அல்லது தங்களுடைய அஆஇ-களை சொல்லுவதற்கும் கூட முடியாத அவர்களில் சிலரால் எம்மாதிரியான இசையையும் வாசிக்க முடிகிறதே. நீங்கள் அந்தவிதமாகவே பிறக்கின்றீர்கள். உங்களால் அதிலிருந்து விலகியிருக்க முடியாது. 30. ஆகையால், அது என்னுடைய நீதியோ, என்னுடைய குடும்பத்தினரின் நற்குணமோ இல்லாதிருந்தது; அது இந்த வரத்தை கீழே ஜனங்களிடம் கொண்டுவந்த தேவனுடைய கிருபையாக தான் இருந்தது. பாருங்கள்? மேலும் அது அப்படியே தேவன் அந்த நோக்கத்திற்காகவே அதை தெரிந்துகொண்டதாக இருக்க நேரிட்டது. அப்படியானால் அது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கையில், அது எல்லா நேரமும் படிப்படியாக அதிக அதிகாக வளர்ந்துகொண்டும், அதிக அதிகமாக ஆகிக்கொண்டுமிருக்கிறது. மேலும் அதன்பிறகு இந்த இரவிலே, இரண்டு அல்லது மூன்று பேர் வந்திருந்தார்கள், ஜெபம் செய்யப்பட்டபோது, மேடையிலேயே சுகமடையவும் செய்தார்கள். நான் வெளியே நோக்கிப் பார்த்தபோது, அம்மனிதனைக் கண்டேன். நான் கவனித்து அவனை நோக்கிப் பார்க்கையில், அவன் காணமுடியாதபடி முழுவதுமாக மூடப்பட்டிருந்ததைக் கண்டேன். அங்கே வந்து கொண்டிருக்கையில், அவனுடைய முகமானது மிகவும் சிவந்துபோய் காணப்பட்டது. அவனுக்கு சற்று மேலே, இந்தவிதமான ஒரு பிரசங்க பீடத்தைக் கண்டேன், ஒரு மனிதர் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். நான் மறுபடியும் கீழே நோக்கிப்பார்த்தபோது, அது அதே மனிதனாகத்தான் இருந்தது. நான், 'ஐயா, நீர் ஒரு ஊழியக்காரர் தானே' என்றேன். அதற்கு, 'ஆம் ஐயா' என்றார். அப்போது அப்படியே எனக்கு முன்பாக ஏதோவொன்று வெளிப்படுவதைக் காணத் தொடங்கி, நான் அவரைக் கண்டேன். நான், 'ஆமாம், நீர் ஒரு ஊழியக்காரர் தான். நீர் செய்யாத ஏதோவொன்றைச் செய்யும்படியாக ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு முன்பு, தேவன் உம்மிடம் சொன்னார். நீரோ அதைச் செய்யத் தவறிவிட்டீர். அப்போது முதற்கொண்டு, பிரச்சினை மாத்திரமே இருந்து வருகிறது, உம்முடைய காலில் ஒரு எலும்பு பொருத்தி இணைக்கப்பட்டு நீர் இப்பொழுது சற்றுமுன்புதான் மருத்துவமனையிலிருந்து வருகிறீர்' என்றேன். அவர் கதறி அழத்தொடங்கினார். அங்கேயே தேவன் அவரைச் சுகப்படுத்தினார். 31. என்னுடைய நோயாளி வருவதைக் காண நான் மறுபக்கம் திரும்பத்தொடங்கினபோது, அவர்கள் ஒரு வாலிப பெண்ணை மேடைக்குக் கொண்டுவந்து கொண்டிருந்தார்கள். நான் கீழே நோக்கிப்பார்த்தபோது, இதோ ஒரு மனிதன் தூக்குப்படுக்கை ஒன்றின்மேல் படுத்துக்கொண்டிருந்தான். இதோ அவனுக்கு சற்று மேலாக நான் நோக்கினபோது, மேலே அந்தரத்தின் நடுவிலே நின்று, ஒரு மனிதன் வேலைசெய்து கொண்டிருப்பதைக் கண்டேன். கப்பலின் பாய்மரம் முதலானவற்றைக் கட்டுகிற ஒருவர். கப்பலின் பாய்மரம் முதலானவற்றைக் கட்டுகிற ஒருவர் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? உங்களில் அநேகருக்குத் தெரியும். பாருங்கள்? அவர் கயிற்றை தற்காலிகமாக சுருக்கும்படி ஏதோவொன்றின் மேல் ஒரு இரட்டை முடிச்சு போட்டு கட்டிக்கொண்டிருந்தார்... உயர்த்தும்படியான ஒரு முடிச்சு. நான் நோக்கிப்பார்த்தபோது, அம்மனிதனைக் கண்டேன். நான் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். எங்கே என்று பார்க்க நான் நோக்கினேன் - அதே மனிதன் தான் அங்கே கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தார். நான் மறுபடியும் திரும்பிப் பார்த்தேன்; அது மீண்டும் எனக்கு முன்பாக வந்தது. அந்த மனிதன் விழுவதைக் கண்டேன். அப்பொழுது நான், 'ஐயா, நீர் கப்பலின் பாய்மரம் முதலானவற்றைக் கட்டுகிறவர். இல்லையா' என்றேன். அவர், 'ஆம் ஐயா' என்று சொல்லிவிட்டு... தொடங்கினார். நான், 'ஏறக்குறைய மிக நீண்டகாலத்திற்கு முன்பே (அது எவ்வளவு காலம் என்று இப்பொழுது மறந்துவிட்டேன்) நீர் விழுந்தீர். அவர்கள் உம்மை ஒரு மருத்துவமனைக்குக் கொண்டுபோனார்கள், கண்ணாடிகள் அணிந்துள்ள கறுத்த தலைமயிருடைய உயரமான ஒரு மனிதர் தான் உம்முடைய மருத்துவராக இருந்தார்' என்றேன். அதற்கு, 'அது சரியே' என்றார். நான், 'உமது மனைவி இளம்பொன்னிற தலைமயிருடைய ஒரு பெண். உமக்கு இரண்டு சிறு பிள்ளைகள் இருக்கிறார்கள்' என்றேன். 'அது முற்றிலும் சரியே.' நான், 'நீர் இப்பொழுது மூன்று, அல்லது நான்கு, ஐந்து வருடங்கள் அல்லது அதற்கும் அதிக வருடங்களாக உம்முடைய முதுகில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்' என்றேன். 'அது முற்றிலும் சரியே' என்று சொன்னார். மேலும்-மேலும் அவர் சொன்னார் - அவர், 'நல்லது, உமக்கு அது எப்படி தெரியும் என்று எனக்குப் புரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?' என்றார். நான், 'ஐயா, எனக்குத் தெரியாது' என்றேன். நான் திரும்பத் தொடங்கி, நான் மறுபடியும் நோக்கிப்பார்த்தபோது, அப்படியே அதே அளவைப்போன்றே, அம்மனிதன், ஒரு பழுப்புநிற சூட்டை அணிந்தபடி, அந்த ஜனங்களுடைய தலைக்கு சற்று மேலாக சரியாக மேலே நடந்து, 'கர்த்தருக்கு துதி உண்டாவதாக. கர்த்தருக்குத் துதி உண்டாவதாக' என்று சொல்லிக்கொண்டே, அந்தக் கட்டிடத்தினூடாக போய்க் கொண்டிருந்தார். அப்போது நான், 'ஐயா, இயேசு கிறிஸ்து உம்மைச் சுகப்படுத்திவிட்டார். உம்முடைய கால்களை ஊன்றி எழுந்து நில்லும்' என்றேன். கீழே அவருடைய இடுப்பிலிருந்து முடக்கு வாதத்தினால் பாதிக்கப் பட்டிருந்தது, அவரோ எழுந்து அந்தக் கட்டிடத்தினூடாக சென்று, கர்த்தரைத் துதித்துக்கொண்டிருந்தார். 32. அதன்பிறகு, இந்தவிதமாகத் திரும்பி, நோக்கிப்பார்த்தபோது, ஒரு பெண் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பதைக் கண்டேன். மேலும் அவளுக்கு அருகில் ஒரு பெண் நின்றுகொண்டிருப்பதையும், ஒரு நீலநிற கம்பளம் மற்றும் அதைச் சுற்றிலும் விளிம்பில் பின்னிவிடப்பட்டு தொங்கிக்கொண்டிருந்த ஒரு சிறு வெள்ளைநிற நூல்தொங்கலோடும் இருந்த வலிப்பு நோய்க்காளான ஒரு சிறு குழந்தையையும் அவளுடைய கரத்தில் கண்டேன். ஏன், அந்த நோயாளியை மீண்டும் பார்க்கும்படி நான் திரும்பினபோது, என்னை நோக்கி இந்த வழியாக வந்துகொண்டிருந்தார்கள். நான் திரும்பிப் பார்த்து, மறுபடியுமாக கண்டு, தரிசனம் இன்னுமாக அங்கு உள்ளதா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். நான் பார்த்தபோது, அந்தப் பெண் ஒரு சிறு குழந்தையை பிடித்தபடியிருக்கக் கண்டேன். அதன்பிறகு அது முழுவதுமாக மறைந்துவிட்டது. அந்தப் பெ-பெண்ணோ தன்னுடைய கரங்களை இவ்வவிதமாக வைத்துக்கொண்டு அமர்ந்து, அவள் அழுதுகொண்டிருந்தாள். நான், 'வாலிப பெண்ணே, நீ ஒரு வலிப்புநோயாளியாகவே பிறக்கவில்லையா?' என்று கேட்டேன். அவள், 'ஆம், ஐயா' என்றாள். மேலும் நான், 'உன்னுடைய தாயார் விளிம்பில் பின்னிவிடப்பட்டு சுற்றிலும் வெள்ளைநிற நூல்தொங்கல் கொண்ட ஒரு சிறு நீலநிற கம்பளத்தில் உன்னை வைத்துக் கொண்டிருப்பதைக் குறித்த ஒரு தரிசனத்தைக் கண்டேன்' என்றேன். நான் அப்படியே இவ்விதமாக சுற்றும் முற்றும் பார்த்து ... சொன்னேன். அது அப்படியே நின்றுகொண்டிருந்தது அப்படியே ஒரு... மேலும் நான், 'சரியாக இங்கேயே உன்னுடைய தாயார் உட்கார்ந்திருக்கிறாள். அது ஏறக்குறைய 25 வருடங்களுக்கு முன்பு நடந்தது, ஆனால் நான் இன்னும் அவள்மேல் அந்த அம்சங்களைக் காண்கிறேன். இது உங்கள் மகளல்லவா?' என்றேன். அவள், 'ஆம், ஐயா' என்றாள். நான், 'அவளருகில் வந்து நிற்கிறது. சரியாக, அதோ அது இருக்கிறது' என்றேன். அவள், 'ஐயா, நான் என்ன செய்ய வேண்டும்? நான் குணமாகிவிட்டேனா?' என்று கேட்டாள். நானோ, 'சகோதரியே, எனக்குத் தெரிந்த ஒரே காரியம் என்னவென்றால் நான் கண்டதெல்லாம் அவ்வளவு தான். அது என்னிடமிருந்து போய்விட்டது. சொல்லும்படி அவர் என்னிடம் என்ன சொல்லுகிறாரோ அதைத்தவிர வேறெதையும் என்னால் கூற முடியாது... யாருமேயில்லை. எந்த உண்மையான தீர்க்கதரிசியும், முதலில் தேவன் அதை உள்ளே வைக்காமல், எப்பொழுதாவது அவனால் பேசவே முடியாது. அவன் அவ்வாறு பேசினால், அது தோல்வியான ஒன்றாகவே இருக்கும், அது சரியாக இருக்காது. அதனால் நீங்கள் வெறுமனே அவமானத்தை மட்டுமே கொண்டுவருகிறீர்கள். பாருங்கள், பேசும்படியாக தேவன் சொல்லுவதை மாத்திரமே பேசுங்கள். அது என்னுடைய சொந்த தாயாராக இருந்தாலும் பரவாயில்லை, சொல்லும்படி அவர் என்ன சொன்னாரோ அதை மட்டுமே என்னால் சொல்ல முடியும்' என்றேன். 33. மறுபடியுமாக அந்தப் பெண்ணைப் பார்த்துக்கொண்டு, இந்த மற்ற பெண்ணிற்காக ஜெபிக்கத் தொடங்கினேன். சற்று கழிந்து அவள் மேலே நடந்துவந்தாள், அந்தப் பெண் அவ்வாறு வந்தாள், ஒரு அருமையான தோற்றம்கொண்ட வாலிப பெண், அவள் கீழே தன்னுடைய தோளின் மேல் குட்டையான கறுத்த தலைமயிரை உடையவளாயிருந்தாள். நான், 'மாலை வணக்கம்' என்றேன். அவளும், 'மாலை வணக்கம்' என்றாள். நான் அவளுடைய கரத்தைப் பற்றிப் பிடித்தேன், நல்லது, அது வினோதமாகத் தோன்றியது. அங்கே ஒரு செவிட்டுத்தன்மையின் ஒரு-ஒரு-ஒரு அதிர்வு வந்துகொண்டிருந்தது. நான், 'நான் சொல்லுவது கேட்கிறதா?' என்று கேட்டேன். அவள், 'ஆம், ஐயா' என்றாள். நான், 'ஏன், நீ... அது-அது ஒரு செவிடான...' என்றேன். அவள், 'எனக்கு ஒரு காது செவிடாயிருக்கிறது' என்றாள். நான், 'அது ஒரு செவிட்டு ஆவி என்பதை அறிந்துகொண்டேன். சரியாக எவ்வளவு என்று என்னால் சொல்ல முடியாதிருந்தது' என்றேன். அதற்கு அவன் ... என்று சொன்னாள். அவள், 'ஆம், ஐயா. அநேக வருடங்களாகவே என்னுடைய காது செவிடாக இருந்து வருகிறது' என்றாள். நான், 'நான் இயேசுவிடம் வேண்டிக் கொண்டால், அவர் உன்னைச் சுகமாக்குவார் என்று நீ விசுவாசிக்கிறாயா?' என்று கேட்டேன். அவள், 'என்னுடைய முழு இருதயத்தோடும், நான் அதை விசுவாசிக்கிறேன்' என்றாள். மிகவும் பரிசுத்தவாட்டியாக தோற்றமளிக்கும் சிறு வாலிப பெண். மேலும் நான்... ஏறக்குறைய வயது இருபதுகளில் உள்ள வாலிப பெண், நான் நினைக்கிறேன்... அந்த வாலிப பெண்ணிற்காக நான் ஜெபிக்க என்னுடைய தலையைத் தாழ்த்தினேன். நான் அவ்வாறு தாழ்த்தியபோது, நான் எழுந்து அவளுடைய கரத்தைப் பிடித்தேன், அதிர்வோ நிற்கவில்லை. என்ன நடந்து கொண்டிருந்தது என்பதன் பேரில் அப்படியே ஒருவிதத்தில் மிகவும் பதட்டமாக உணரும்படி ஆக்கியிருந்தது, ஏனென்றால் அது-அது அப்படியே அவ்விதமாக ஏதோவொன்று உங்களை பலமாக இழுப்பது போன்று உணருகிறது. அப்படியே... நீங்கள் அபிஷேகத்தின் கீழ் இருக்கும்போது, உங்களால் அப்படியே அதைச் சொல்ல முடியும். அது அப்படியே எல்லாவிடங்களிலும் உணருகிறது. அது அப்படியே ஏதோவொன்று அவ்விதமாக இழுத்துக்கொண்டிருப்பது போன்று தான் வருகிறது. 34. மேலும் இப்பொழுது, இன்றிரவில் நான் அப்படியே என்னுடைய இருதயத்திலிருந்து உங்களிடம் வெளிப்படையாகப் பேசுகிறேன், ஏனென்றால் நான் களைப்பாகவும், ஒரு பிரயாணத்திலும் இருக்கிறேன், கூட்டங்களைக் குறித்த பின்னணிசூழல்களை ஒருவிதத்தில் உங்களிடம் வெளிப்படுத்த விரும்பினேன், அதனால் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அதன்பிறகு இக்காரியங்கள் உண்மையில்லை என்றால், அப்பொழுது - இந்தக் கூட்டத்தினூடாக, நல்லது, நீங்கள் சொல்லுங்கள்... நீங்கள் சரியாக நடந்து வந்து சகோதரன் பிரன்ஹாம் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்று சொல்லுங்கள். பாருங்கள்? அது உண்மையாக இருக்குமானால், அப்பொழுது நீங்கள் இயேசு கிறிஸ்துவை அவருடைய மகத்துவத்திற்காகவும் அவருடைய நன்மைக் காகவும் மகிமைப்படுத்துங்கள். மேலும் அதன்பிறகு... அந்த வாலிப பெண்ணிற்காக நான் மீண்டும் ஜெபிக்கத் தொடங்கினேன், அதுவோ அவளைவிட்டு போகவில்லை. நல்லது, அது என்னுடைய கரங்களினாலே அதை தொடுவதன் மூலமாகத்தான். 35. அந்த நோயாளி தங்கள் வலது கரத்தை இதன்மேல் வைக்கிறார், எடுத்து... என்ன... அது ஏதோவொருவிதமான ஒரு பகுத்தறிதல் தான். கிறிஸ்தவ நண்பர்களே, எனக்குத் தெரியாது. என்னால்-என்னால் சொல்ல முடியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம்; அது என்னவென்று என்னால் அதைச் சொல்ல முடியும். உங்களால் அதை என்னுடைய கûத்தின்மேல் பார்க்க முடியும். என்னுடைய கரமானது மிகப்பெரிதாக வீக்கமடைந்துவிடும் உங்களால் அப்படியே அதைக் கவனிக்க முடியும், அந்தச் சிறு வெண்மையான காரியங்கள் சரியாக என்னுடைய கரத்தின் மேலாக ஓடி, சரியாக என்னுடைய இருதயத்தில் அப்படியே இயக்க முடியாமல் செய்துவிடுகிறது, என்னுடைய கைகளையே அசைக்க முடியாமல் நான் கஷ்டப்படும் அளவுக்கு முற்றிலுமாக அவ்விதம் செய்துவிடுகிறது, அது ஒரு நபருக்குள்ளிருக்கும் கிருமியினால் ஏற்படும் ஒரு வியாதியின் தாக்கமாகும். அவைகளைப் பிடிக்க அது ஒருபோதும் தவறுவதில்லை. அது அங்கேயிருக்கும்போது, நான் அறிந்துகொள்கிறேன். அது விட்டுப் போகும் போதும் எனக்குத் தெரிகிறது, ஆனால் என்னால் அதைப் போகும்படி செய்ய முடியாது. தேவனிடமுள்ள உங்கள் விசுவாசம் தான் அதைப் போகச்செய்ய வேண்டும். நானாகவே அதைப் போகும்படி செய்ய முடியாது. அது உங்கள் விசுவாசமாக இருக்கிறது. 36. அதன்பிறகு நான் அந்த வாலிப பெண்ணை நோக்கிப்பார்த்து, 'நல்லது, இது வினோதமாக உள்ளதே' என்றேன். மேலும் நான்... கொடுத்தேன். அவளைச் சுகப்படுத்தும்படியாக நான் மறுபடியும் இயேசுவிடம் வேண்டியும், அது அப்படியே சரியாக விடாப்பிடியாக இருந்தது. நல்லது, நான், 'ஏதோவொன்று தவறாயுள்ளது. அது போகாது' என்றேன். மேலும் நான் சொன்னேன்... நான் அவளை அவ்விதமாக நோக்கிப்பார்த்தேன். அப்படியே நான் அந்த வாலிப பெண்ணை நோக்கிப்பார்க்கையில், ஓ, அவள் அநேகமாக ஐந்து அடி இரண்டு அல்லது மூன்று அங்குலங்கள் உயரமாக இருந்தாள், மேலும் அவள்... அந்த வாலிப பெண் மேடையின் குறுக்காக சரியாக திரும்பிச் செல்வதைக் கண்டேன். அவ்விதமாகத்தான் அது போனது, சரியாக மேடையின் குறுக்கே போனது. தொடர்ந்து 14 வயதுள்ள சிறு பெண் பிள்ளை அங்கே நின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். பல்வண்ணக்கட்டங்கள் கொண்ட சிறு ரிப்பன்களோடு, கீழே அவளுடைய முதுகில் தொங்கிக்கொண்டிருந்த நீண்ட ஜடைகளை அவள் உடையவளாயிருந்தாள். நான், 'நீ, உனக்கு ஏறக்குறைய 14 வயதாக இருந்தபோது, நீ நீண்ட ஜடைகளை அணிந்திருந்தாய், இல்லையா' என்றேன். அவள், 'ஆம், ஐயா' என்றாள். 37. அந்த வாலிப பெண் தவறான பாதைக்குள் போவதை நான் கண்டேன், இங்கே தான் அது தொடங்கியது. சரியாக நான் எதைக் கண்டேனோ, அதை அப்படியே சொல்லத் தொடங்கினேன். நான், 'உனக்கு 14 வயதாக இருந்தபோது, நீ தவறானதோர் பாதைக்குள் போனாய். ஒரு மனிதனோடு உனக்கு விவாகமாகும் முன்பாகவே, அவன் மூலமாய் உனக்கு ஒரு குழந்தை இருந்தது' என்றேன். இப்பொழுது, ஞாபகமிருக்கட்டும் நண்பர்களே, உங்களிடம் வேண்டுமென்றே செய்யப்பட்ட பாவம் இருக்குமென்றால், அதைக் குறித்து பொதுஜனங்கள் அறிந்துகொள்ள நீங்கள் விரும்பா விட்டால், நீங்கள் இங்கே மேலே வருவதற்கு முன்பாகவே அதை அறிக்கைசெய்துவிடுங்கள், ஏனென்றால் அது நிச்சயமாகவே எல்லா வற்றையும் அப்பட்டமாக சொல்லிவிடுகிறது. இந்நிலையில் அந்த வாலிப பெண் சொன்னாள்... அழத் தொடங்கினாள். 'அது சரிதான்' என்றாள். நான், 'நீ நேசிக்காத ஒரு மனிதனை விவாகம் செய்துகொண்டாய்' என்றேன். அவள், 'அது சரியே' என்றாள். நான், 'நீ அவனைவிட்டு போய்விட்டாய்' என்றேன். 'அது சரியே.' நான், 'அதன்பிறகு நீ கொஞ்சம் மதசம்பந்தமான சமயக் கோட்பாட்டுமுறையோடு போய்விட்டாய், அவர்கள் வேறொரு மனிதனை உனக்கு விவாகம் செய்து வைத்தார்கள்' என்றேன். 'அது சரியே.' நான், 'நீ அவனையும் நேசிக்காமல் அவனைவிட்டும் போய்விட்டாய்' என்றேன். 'அது சரியே.' நான், 'நீ வேறொரு மனிதனை விவாகம் செய்துகொண்டாய்' என்றேன். 'அதுதான்.' மேலும் அந்நேரத்தில் நான், 'நீ ஒருகாலத்தில் கிறிஸ்தவளாக இருந்தாய், அதன்பிறகு நீ பின்னோக்கி சென்று, தேவன்பேரில் பின்வாங்கிப்போய்விட்டாய்' என்றேன். 'அது சரியே.' அவள் மயக்கமடைந்து தரையை நோக்கி விழப்போவது போன்று தள்ளாடினாள். அவள் அவ்வாறு செய்து, கதறினபோது, தேவன் அவளை மன்னித்தார்; அவளுடைய கேட்கும் சக்தி திரும்பவும் வந்தது, அவள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தையும் பெற்றுக்கொண்டு, அவ்விதமாக மேடையின்மேல் நின்று கொண்டிருந்தாள், அப்படியே-அப்படியே திடுதிப்பென்று அங்கே நின்றுகொண்டிருந்தாள். 38. நான் மறுபக்கம் திரும்பினேன். நான் அவ்வாறு திரும்புகையில், இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்த நற்குடியாளரை நான் பார்ப்பது போல அப்படியே அவ்வளவு தெளிவாக அந்த ஊனமுற்ற பெண் பிள்ளை அந்த நாறிகாலியில் உட்கார்ந்து கொண்டிருப்பதைக் கண்டேன், நாற்காலியை விட்டு எழுந்தாள், அவள் அங்கே எப்படி உட்கார்ந்து கொண்டிருந்தாளோ அதைக் காட்டிலும் அவள் வித்தியாசமாக உடுத்தியிருந்தது மாத்திரமே, தொடர்ந்து அவள் அந்த தூண்களுக்கு இடைப்பட்ட நடைபாதை வழியாக கீழே நடந்துகொண்டே போவது போன்று காணப்பட்டது, அவள் அப்படியே அவ்விதமாக தன்னுடைய கைகளை அசைத்துக்கொண்டே, 'தேவனுக்கு நன்றி. தேவனுக்கு நன்றி' என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அது படிப்படியாக மறைந்துபோவது வரையில் நான் அவளைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன். நான் மீண்டும் மறுபக்கம் திரும்பி, 'அன்பு சகோதரியே...' என்றேன். ஓ, அது... நண்பர்களே, நீங்கள்... அது... அறிந்துகொள்ள எவ்வாறு உள்ளத்தில் உணர்கிறது என்பதை நீங்கள் ஒருபோதும் அறியமாட்டீர்கள். நீங்கள் எங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறியும்போது, அங்கே ...இல்லை. அங்கே... எதுவுமில்லை. அப்பொழுது நரகத்திலுள்ள எல்லா பிசாசுகளினாலும் அதை தடுக்கவே முடியாது. இல்லை, ஐயா. மருத்துவர்கள் படுக்கையின் அருகில் நின்றுகொண்டு, 'அவனால் உள்ளே வர முடியாது. அந்த மதவெறித்தனம். நல்லது, நாம் இங்கே உள்ளே அனுமதிக்க முடியாது' என்று சொல்லுவதை நான் கண்டிருக்கிறேன். நான், 'நீங்கள் அப்படியே ஒருபக்கமாக விலகி ஒரு சில நிமிடங்கள் இந்த நோயாளியைக் கவனிப்பீர்களா?' என்றேன். என்னே, ஜ்ட்ங்ய் அவர்கள்... அப்படியே சற்றுநேரத்தில் அவர்கள் பரிபூரண சுகத்தோடு இருப்பதைக் கவனியுங்கள். அது ஒருபோதும் தவறிப்போகவேயில்லை. தேவன் என்னுடைய நியாயாதிபதியாயிருக்கிறார். 39. அந்தச் சிறு வாலிப பெண்ணைப் பார்த்து, நான், 'சகோதரியே, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து உன்னுடைய ஜெபங்களைக் கேட்டு உன்னைச் சுகப்படுத்திவிட்டார். உன்னுடைய கால்களை ஊன்றி எழுந்துநில்' என்றேன். அந்த வாலிப பெண் தான் எட்டு வயதாக இருந்தது முதற்கொண்டே நடந்ததில்லை. அவளோ அந்த சக்கரநாறிகாலியை விட்டு எழுந்து வெளிவந்து அங்கு நின்றாள். சகோதரன் ரிச்சி அவர்களே, நீர் அங்கே நின்றுகொண்டிருந்தீர். அவள் அங்கே அந்தக் கட்டிடத்தினூடாக சென்று தேவனை மகிமைப்படுத்திக் கொண்டிருந்தாள். அவர்கள் அந்தச் சக்கர நாற்காலியை பின்னோக்கி நகர்த்திவிட்டார்கள். தேவனுடைய மகிமையானது அக்கட்டிடத்தில் எங்கும் ஆட்கொண்டு, ஜனங்கள் எழும்பி தங்கள் ஊன்றுகோல்களையும் நடக்க உதவும் கோல்களையும் தூக்கி எறிந்துவிட்டு நடந்துசெல்லத் தொடங்கினார்கள். அது என்ன? அது ஜனங்களைச் சுகப்படுத்துவதில்லை, உங்களிடம் என்ன தவறுள்ளது என்று உங்களிடம் சொல்வதற்குத் தான் அது. ஆனால் நண்பர்களே, அது என்ன செய்கிறது என்பது இதோ இருக்கிறது. இயற்கைக்கு மேம்பட்ட தேவன் நம் மத்தியில் கிரியைசெய்து கொண்டிருக்கிறார் என்ற உணர்தலையே அது கொண்டுவருகிறது. சரியாக அவ்வாறே தான். 40. மேலும் நான் விசுவாசிப்பது என்னவென்றால்... இப்பொழுது, நான்... அது தேவன் தான் என்று நான்-நான் அறிவேன். ஆனால் நண்பர்களே, நான் நினைப்பது என்னவென்றால், அது அப்போஸ்தல நாட்கள் மறுபடியும் நிகழ்வதுதான். ஏனென்றால்... அநேக ஜனங்களைப்போல, இப்பொழுது அதை மத வெறித்தனமாகவோ, தன்வயப்படுத்தும் வசீகர சாஸ்திரமாகவோ, ஆவியுலக தொடர்பு கோட்பாடாகவோ, அல்லது என்னவாயினும் அதுவாகவோ வகைப்படுத்த முயற்சிசெய்து விடாதீர்கள். அவர்கள் அதை பிரகடனம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் பரிசுத்த பவுல் ஒருமுறை நின்று பிரசங்கம்பண்ணி, 'சுகமடைய உனக்கு விசுவாசம் உண்டென்று காண்கிறேன்; இயேசு கிறிஸ்து... உன்னுடைய கால்களை ஊன்றி எழுந்துநில்' என்று சொன்னான். ஆனால் சாத்தான் நிச்சயமாக அதன்பேரில் ஏதோவொரு வித பெயரை பிணைக்கத்தான் போகிறான். இப்பொழுது, நமக்கு அது தெரியும். ஆனால் இயேசு கிறிஸ்துவின் வருகை சமீபமாயுள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன். நான்-நான் அதை... உடனும் விசுவாசிக்கிறேன். நீங்கள்-நீங்கள்... நீங்கள் அதை மதவெறித்தனம் என்று அழைக்க விரும்பினால், அப்பொழுது அப்படியே தொடர்ந்து செய்து என்னை ஒரு மதவெறியன் என்று முத்திரை குத்துங்கள். ஏனென்றால் இரண்டாம் முறையாக இயேசுவின் உண்மையான, சரீரபிரகாரமான வருகையில் நான் விசுவாசமுள்ளவன், அது சமீபமாயுள்ளது என்றும் இப்பொழுதே என்றும் நான் விசுவாசிக்கிறேன். கிரியை செய்ய நமக்கு வெறுமனே குறைவான நேரமே உள்ளது என்று நான் நம்புகிறேன். 41. மனிதர்களும் ஸ்திரீகளும் பாவத்திலே இன்ப களியாட்டமாய் வாழ்ந்து கொண்டிருக்கையில், இன்று தேசங்களை வீசியடித்துக் கொண்டிருக்கும் இந்த உலகளாவிய எழுப்புதலானது நோவாவின் நாட்களில் இருந்ததுபோன்ற செய்தியின் அறிகுறியாகத்தான் உள்ளது என்று நான் நம்புகிறேன். நோவா தான் பிரசங்கம் பண்ணின மட்டுமீறிய உணர்ச்சியார்வம் வாய்ந்த ஒரு சுவிசேஷத்தை உடையவனாயிருந்தான். ஆனால் பாதுகாப்பான ஒரு பேழையிடம் அவன் ஜனங்களை அழைத்தான். பரிசுத்த ஆவியின் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய குமாரனின் மகிமையான சுவிசேஷமானது இன்றைக்கு தேசத்தில் வீசியடித்துக்கொண்டு, வரப்போகிற நியாயத்தீர்ப்புகள் எல்லாவற்றிலுமிருந்து பத்திரமாக பாதுகாக்கும் இயேசு கிறிஸ்துவாக இருக்கிற பேழைக்குள்ளே ஜனங்களைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். நியாயத்தீர்ப்பு பூமியை தாக்கி, அணு சக்திகள் தேசங்களை அசைக்கும் போது, நாம் அந்த அலைகளின் மேலாக மகிமைக்குள்ளே பிரயாணம் செய்வோம். நான் அதை விசுவாசிக்கிறேன். மதவெறியர்கள் என்று நீண்ட காலமாக அழைக்கப்பட்டுவரும் ஒரு சிறிய சபையானது அங்கே இருந்துவருகிறது என்று நான் நம்புகிறேன். 42. இப்பொழுது, அங்கே மதவெறியர்கள் இருக்கிறார்கள் என்று நான் உணருகிறேன். நிச்சயமாக அங்கே இருக்கிறார்கள். அவர்களில் ஏராளமானோர் அங்கேயிருக்கிறார்கள். ஆனால் அயரா அரும்பாடுபட முயன்ற ஒரு சிறு சபையானது, எந்த குறிப்பிட்ட ஸ்தாபனமாகவோ அல்லது குறிப்பிட்ட எந்த பெயராகவோ இல்லை, ஆனால் தேவனை நேசித்து, இயற்கைக்கு மேம்பட்டவைகளுக்காக தொடர்ந்து நிலைத் திருக்கிற ஜனங்களைத்தான் நான் சுட்டிக் காட்டுகிறேன், பரிசுத்த ஆவியானவர் மூலமாக அவர் செய்வதாக வாக்குத்தத்தம் பண்ணியது போன்று இன்றைக்கு தேவன் நம் மத்தியில் ஜீவித்துக் கொண்டிருக்கிறார்... அவர்கள் பரிசுத்த உருளை என்றும், மதவெறியர்கள் என்றும், தெய்வீக சுகமளிப்பவர்கள் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்கள், அவர்கள் சந்துகளுக்குள் நெருக்கி பின்னோக்கி தள்ளப்பட்டும் எல்லாமாக அழைக்கப்பட்டும் வருகிறார்கள். ஆனால் ஒவ்வொரு மகத்தான ஓவியமும், அது புகழ்பெற்றவர்களின் படங்கள் இருக்கும் அருங்காட்சியகத்தில் தொங்கவிடக்கூடும் முன்பு, அது விமர்சகர்களின் மண்டபம் வழியாகப் போயாக வேண்டியிருக்கிறது. அந்தச் சிறு சபையானது விமர்சகர்களின் மணடபம் வழியாக போயிருக்கிறது. இப்பொழுது சீக்கிரத்திலே, வானங்களிலிருந்து ஒரு கதறல் சப்தம் வரும், தேவன் அதை புகழ்பெற்றவர்களின் படங்கள் இருக்கும் அருங்காட்சியகத்தில் தொங்க விடப்போகிறார், எடுத்துக்கொள்ளப்படுதல் மூலமாக அதை வெளியே எடுத்து, அதை மேலே மகிமைக்குள் கொண்டு செல்லப்போகிறார். விசுவாசத்தை ஊக்குவிக்கவும், அவர் வரும்போது, முன்பே மரித்துப்போனவர்களோடு கூட அவரை ஆகாயத்தில் சந்திக்கும்படி நாம் ஒன்றாக எடுத்துக்கொள்ளப்பட்டு மேலே எழுப்படுவோம் என்பதை விசுவாசிக்கும்படிக்கும், நாம் இன்று இருப்பது போன்ற அடையாளங்களையும் அற்புதங்களையும் பார்த்துக் கொண்டி ருக்கிறோம். 43. இப்பொழுது, அவர்களில் அநேகர் விழுந்துபோயும், பின்வாங்கிப்போயும், தூரமாகப் போயும்விட்டார்கள்... என்று நம்புகிறேன், நான், 'பின்வாங்கிவிட்டார்கள்' என்ற அந்த வார்த்தையை உபயோகிக்கிறேன். அது ஒருவகையில் ஒரு பாப்டிஸ்டுக்கு கடினமாக இருக்கிறது, இல்லையா. ஆனால் நீங்கள் நிச்சயமாக பின்வாங்க முடியும் என்று நான்-நான் விசுவாசிக்கிறேன். அது-அது உண்மை. எனவே உங்களால் கூடும் என்று நான்-நான் அறிவேன். ஒருகாலத்தில் நடந்து பிரயாணம் செய்து கொண்டிருந்த மனிதர்களையும் தேவனைவிட்டு தூரமாகப் போய்விட்டவர்களையும் அது அழைத்துக் கொண்டிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். இயேசு கல்வாரியில் தம்முடைய மரணத்தின் மூலமாக மீட்டுக் கொண்ட அந்த மீட்கப்பட்டவர்களை மகிமைக்கான வீட்டிற்குக் கொண்டுபோகும்படி, அவர்களை ஒன்றுகூட்ட தேவன் இயேசுவை இரண்டாவது முறையாக பூமிக்கு அனுப்பும் போதுள்ள, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு சற்று முன்னே, அவர்கள் திரும்பிவர அது அழைத்துக் கொண்டிருக்கிறது, சபையை ஒன்றுகூடும்படி அழைத்துக்கொண்டிருக்கிறது. 44. இப்பொழுதும், நண்பர்களே, இப்பொழுது இன்றிரவிற்காக. நான் மிக நீண்டதாய் அதிக நேரம் எடுத்துக்கொள்ள மாட்டேன். நாம் இன்றிரவு வியாதிப்பட்ட சில ஜனங்களுக்காக ஜெபிக்கவும், நாம் நம்முடைய - நம்மைநாமே நிலவரமான வர்களாய் இருக்க முடியும் நிலைக்கு ஜனங்களைக் கொண்டுவரவும் விரும்புகிறோம் என்று நினைக்கிறேன். ஆனால் நான் ஜெபத்தில் இருக்கையில், ஒரு இரவுக்காகவோ அல்லது அவ்வண்ணமாகவோ, இன்னும் கூடுதலாகவோ அல்லது மேலும் குறைவாகவோ - ஒருவருக் கொருவர் நன்கு தெரிந்துகொள்ளத்தான். இப்பொழுது நீங்கள் எனக்கு வாக்குக் கொடுப்பீர்களா... சரியாக கூட்டத்திற்குள்ளே ஒருமுறை இவ்விதமாக வெறுமனே அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்பது ஒருவிதத்தில், எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் உள்ளது. தேவன் அதை அருள வேண்டுமென்று நீங்கள் என்னோடு கூட ஜெபிப்பீர்களா? இப்பொழுது, அவர் என்னிடம் வரும்வரைக்கும் அதைக்குறித்து ஒரு காரியத்தையும் என்னால் செய்ய இயலாது. உங்களுக்குப் புரிகிறதா? அவர் வரும்வரைக்கும் நான் அப்படியே இவ் வுலகத்திலுள்ள எந்த சிருஷ்டியையும் போன்று அவ்வளவு உதவியற்றவனாகத்தான் இருக்கிறேன். நாம் ஜெபத்தில் இருக்கையில், அவர் சரியாக இன்றிரவில் வருவாராக. அவர் அவ்விதம் வருவாரென்று நான் நம்புகிறேன். அது ஒருபோதும் மிகத் துரிதமாக வந்ததில்லை. வழக்கமாக நான் இரண்டு அல்லது மூன்று நாட்கள் உபவாசித்து ஜெபிக்கிறேன், அப்பொழுது அது என்னிடமிருந்து தூர இருப்பதை உணரத் தொடங்குகிறேன், அதன்பிறகு அது என் அருகில் வருகிறது. சற்று கழிந்து அது என்மேல் இருக்கிறது, மேலும் அதன்பிறகு அந்த... நான்... அப்பொழுது அது அப்படியே எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது. ஆராதனைகளில், நான்-நான் பேசுவதில்லை, நான் வெறுமனே உள்ளே வந்து, அவர்கள் ஜெப வரிசையை துவங்குகிறார்கள், அப்பொழுது நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறேன். எனவே, நீங்கள் என்னோடு கூட ஜெபியுங்கள். 45. இப்பொழுது... இன்றிரவு நாம் ஜெபித்துக் கொண்டிருக்கையில், இங்கேயிருக்கும் ஜனங்கள், அவர்களில் சிலர் அநேகமாக அவசர தேவையிலிருக்கும் நோயாளிகள் தான், ஒருக்கால் நாளை இரவிற்கோ, அல்லது வேறு ஏதோவொரு இரவிற்கோ திரும்பிவர இயலாமலிருக்கும் மிகவும் வியாதியோடு இருப்பவர்களாக இருக்கலாம்... ஆனால் நீங்கள் தாமே ஒன்றாக இணைந்து, வீட்டிலேயே ஒரு ஜெபக்கூட்டத்தைத் துவங்குவீர் களானால்... இப்பொழுது, மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டு, லுத்தரன் ஆகிய நீங்கள் எல்லாரும், நீங்கள் எதுவாக இருந்தாலும், நாமெல்லாரும் நம்மைநாமே ஒருங்கிணைத்துக்கொள்வோம். இப்பொழுது நாம் எந்த ஸ்தாபனத்தையும் பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை; நாம் இயேசு கிறிஸ்துவையே பிரதிநிதித்துவப் படுத்துகிறோம் (பாருங்கள்?), எந்த ஸ்தாபனத்தையும் அல்ல. வெளிப்படையாக, சரியாக இப்பொழுது, நான் எந்த ஸ்தாபன சபையையும் சேர்ந்தவனே கிடையாது. நான் எதையும் சேர்ந்தவனல்ல. நான் பாப்டிஸ்டு சபையில் நியமிக்கப்பட்டேன். அவர்களுடைய விருப்பத்தின் மூலமாக, நான்-நான் இனியும் ஒரு பாப்டிஸ்டு அல்ல. நான்... 46. சமீபத்தில் யாரோ ஒருவர் சொன்னார்... நான் ஆர்கன்ஸôவிலுள்ள லிட்டில் ராக்கில் இருந்தேன். ஒரு மனிதர் ஏறக்குறைய வாழ்நாள் முழுவதும் மோசமாக ஊனமுற்றவராயிருந்தார். அவர் ஊன்று கோல்களில் தான் நடந்து கொண்டிருந்தார். அவருக்கு ஒரு ஜெப அட்டை கிடைத்து, அழைக்கப்பட்டு, மேடையின்மேல் அந்த எண்ணுக்கு வந்து சுகமடைந்தார். அவர் வெளியே போனபோது, ஒருசில நாட்களில் அவர் என்னைத் தெருவில் சந்தித்தார். அவர் தம்முடைய கரங்களில் தமது ஊன்றுகோல்களை வைத்துக்கொண்டு வீதிகளில் மேலும் கீழும் நடந்து, சப்தமிட்டுக்கொண்டே போய்க் கொண்டிருந்தார். அவர், 'சகோதரன் பிரன்ஹாமே, உமக்குத் தெரியும், ... நேரத்தில்' என்றார். அவர் ஒரு நசரீனாக இருந்தார், அவர், 'உமக்குத் தெரியும், ஜ்ட்ங்ய்- நீர் முதலாவது பிரசங்கம் பண்ணத் தொடங்கினபோது, நிச்சயமாகவே நீர் ஒரு நசரீன் என்று நினைத்தேன். அதன்பிறகு நான் மிக அநேக பெந்தெகோஸ்தேயினரை நெடுக கண்டேன், நீர் பெந்தெகோஸ்தே காரராக போய்விட்டதாக யாரோ ஒருவர் என்னிடம் சொன்னார். இப்பொழுதோ, நீர் ஒரு பாப்டிஸ்டு என்று நீர் சொல்வதை நான் கேட்டேன். எனவே, எனக்கு-எனக்கு இது புரியவில்லை' என்றார். நான், 'அது எளிது. நான் ஒரு பெந்தெகோஸ்தே, நசரீன், பாப்டிஸ்டாக இருக்கிறேன்' என்றேன். எனவே அவ்விதமாகத்தான் நாமிருக்கிறோம். நாம் அப்படியே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அவருடைய இரக்கத்தில் பிரதிநிதித்துவப் படுத்துகிறோம். அது சரியே. ஒரே ஆவியினாலே நாமெல்லாரும் ஒரே சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு ஒரே ஜனங்களாக ஆகிறோம். மேலும் அந்த... 47. நான் மெதோடிஸ்டா, லுத்தரனா, பாப்டிஸ்டா, அல்லது பெந்தெகோஸ்தேயா என்று இயேசு என்னிடம் கேட்கப்போவதில்லை; நான் என்னுடைய இருதயத்தில் என்னவாக இருந்தேன் என்றுதான் அவர் என்னை நியாயந் தீர்க்கப் போகிறார். அது சரியே. அவர் நம்மெல்லாரையும் அதன் மூலமாகத்தான் நியாயந்தீர்ப்பார். எனவே இப்பொழுது, இது வெறுமனே ஒரு சபை தான் நினைத்துவிடாதீர்கள். நாம் எல்லா சபைகளையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறோம். ஜெப வரிசைக்குள் வருகிற ஜனங்களில் அநேகர் மெதோடிஸ்டுகளாகவும், பாப்டிஸ்டுகளாகவும், கத்தோலிக்கராகவும் இருக்கிறார்கள், அவர்கள், எல்லாவிதமாகவும், ஒவ்வொருவிதமாகவும்... விசுவாசத்தின் அடிப்படையின் பேரில் வந்து சுகமடையாதவர்கள் ஒருவரையாவது நான் ஒருபோதும் இதுவரை கண்டதேயில்லை. அது சரியே. விசுவாசத்தின் மூலமாகத்தான் நீங்கள் சுகமடைகிறீர்கள், நீங்கள் எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறீர்கள் என்பதல்ல. பிரபலமான கிறிஸ்தவர்களாகிய ஜனங்கள் வந்து, அங்கு நின்று, அவர்களால் சுகமடைய முடியாதிருந்த காரணம் சொல்லப்படுவதை நான் கண்டிருக்கிறேன். பாவிகளாயிருக்கிற தெரு வேசிகளும், வேசிகளும், கெட்ட பெருடைய ஜனங்களும் தெருக்களிலிருந்து வந்து ஊனமுற்ற நிலையிலிருந்தும், குருடான நிலையிருந்தும், மற்றும் எல்லாவற்றிலுமிருந்தும் சுகமடைவதைக் காண்கிறேன். இப்பொழுது, சுகமடைவதற்கு நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருக்க வேண்டியதில்லை. ஆனால் பெற்ற சுகத்தில் நீடித்திருக்க நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தாக வேண்டும். 'போ இனி பாவம் செய்யாதே, அல்லது இதைக் காட்டிலும் மோசமானது உன்மேல் வரும்' என்று வேதாகமம் கூறுகிறது. அது சரிதானா? 48. பாவம் என்பது என்ன? பாவம்என்பது என்ன? மதுஅருந்துதலோ, புகைப்பிடிப்பதோ, சூதாடு தலோ, சபையைப் புறக்கணிப்பதோ அல்ல பாவம். பாவம் என்பது அவிசுவாசமாகும். அது சரிதானா? விசுவாசியாதவனோ ஏற்கனவே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப் பட்டாயிற்று. பாருங்கள்? நீங்கள் ... இல்லை. நீங்கள்... செய்வதில்லை. நீங்கள் ஒரு பாவியாக இருக்கிற காரணத்தினால் நீங்கள் அழிந்துபோகவோ அல்லது தேவனிடமிருந்து வேறுபிரிக்கப்படுவதோ கிடையாது. நீங்கள் தேவனோடு கூட நடக்கவோ, தேவனால் அருளப்பட்ட பாதையில் நடக்கவோ மறுக்கிற காரணத்தினால் தான் நீங்கள் தேவனிடம் - தேவனிடமிருந்து வேறு பிரிக்கப்படுகிறீர்கள். மரணமும் ஜீவனும் உங்களுக்கு முன்பாக நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அப்படியே ஆதாமையும் ஏவாளையும் போன்று, ஒவ்வொரு மனிதனும் சுவாதீன சித்தமுள்ளவனாயிருக்கிறான். நம்மெல்லார் முன்பாகவும் ஜீவ விருட்சமும் மரண விருட்சமும் உள்ளன. உங்களுக்கு விருப்பமான இரண்டில் ஒன்றை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பது நீங்கள் எந்த விருட்சத்திலிருந்து புசிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது. அது சரியே. மேலும் தேவன்... நீங்கள் அதைக்குறித்து செய்ய விரும்பும் எதுவாக இருந்தாலும், அதைச் செய்ய சுவாதீன சித்தமுள்ள ஒருவராகத்தான் தேவன் உங்களை சிருஷ்டித் திருக்கிறார். நீங்கள் அவரை நேசிக்கும்படி அவரால் செய்ய முடியாது, அவரை நேசிக்கும்படி அவர் உங்களை கட்டாயப் படுத்தமாட்டார். 49. என்னை நேசிக்கும்படியாக என்னுடைய மனைவியை நான் கட்டாயப்படுத்தினால், நான் அவளை விவாகம்செய்ய பயந்திருப்பேன். ஆனால் அவள் வந்து - நான் என்னவாக இருந்தேன் என்பதற்காக என்னை ஏற்றுக்கொண்டு என்னை விவாகம் பண்ணினாள். அது சரியே. அவள் என்னை நேசித்து அவ்விதமாகவே என்னை ஏற்றுக்கொண்டாள். நாம் அந்தவிதமாகத்தான் தேவனிடமும் வர வேண்டும். நாம் அவரை நேசித்து, வந்து அவருடைய வார்த்தையை விசுவாசிக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். மேலம் தேவனுடைய வார்த்தையானது தெய்வீக சுகமளித்தலைப் போதிக்கிறது. எத்தனை பேர் அதை விசுவாசிக்கிறீர்கள்? நாங்கள் உங்கள் கரங்களைப் பார்க்கட்டும். அது அருமையானது. அது அருமை. வார்த்தையானது அதைப் போதிக்கிறது; அது அதைத் தீர்த்துவைக்கிறது. வரங்களிலம் அழைப்புகளிலும் எத்தனைபேர் விசுவாசிக்கிறீர்கள்? நாங்கள் உங்கள்...ஐ பார்க்கட்டும். அது அருமை. இப்பொபது, வரங்களும் அழைப்புகளும் உங்களைச் சுகப்படுத்துவதில்லை. வரங்களும் அழைப்புகளும்...க்கான விசுவாசத்தை ஊக்குவிக்கிறது. விசுவாசம் தான் உங்களைச் சுகமாக்குகிறது. 50. இப்பொழுது, மேடையில் இருக்கும் நபர், அவர்களுக்கு விசுவாசம் இல்லை என்றால், அவர்களுக்கு விசுவாசம் இல்லை என்று உடனடியாக அவர்களிடம் சொல்லப்படும். அப்போது, ஒருக்கால் இப்பொழுது இதோ இங்கே அது விளக்கிச்சொல்லப்படுகிறது: இங்கே திரு.ஜோன்ஸ் மேலே வருகிறார், அவர் இங்கு மேலே நடந்துவருகிறார். அவர், 'மாலை வணக்கம், சகோதரனே' என்று கூறுகிறார். 'சகோதரன் ஜோன்ஸ் அவர்களே, உமக்கு விசுவாசம் இருக்கிறதா?' 'ஆமாம், எனக்கு விசுவாசமுள்ளது,' இதோ அவருக்கோ இங்கே குறைவாக உள்ளது. இதோ ஒரு... நான் அதை, என்னுடைய சொந்த உணர்வு வெளிப்பாடுகளை உபயோகப்படுத்திப் பார்ப்பேன், அதிர்வானது இதோ மேலே உயர்ந்துகொண்டிருக்கிறது. சகோதரன் ஜோன்ஸ் அவர்களுக்கோ இங்கே குறைவாக இருக்கிறது. சரி. அவர், 'எனக்கு விசுவாசம் இருக்கிறது' என்று சொல்லுகிறார். இங்கே குறைவான நிலையில் அவர்-அவர் ஒருபோதும் சுகமடையவே மாட்டார். அவர் ஒரு -கால அளவில் இருந்திருப்பார், ஏனென்றால் வெறுமனே மிகக்குறைவான கொஞ்சமாக சின்னஞ்சிறிய அளவு விசுவாசமாக இருந்தாலும், நீங்கள் அதைப் பற்றிக் கொண்டிருப்பீர்களானால், அது உங்களை வெளியே கொண்டுவரும். 51. ஆனால் மேடையின் மேலிருந்த எல்லாருமே சுகமடைந்து விட்டனர் என்று ஒரு வாக்குமூலத்தை நீங்கள் கொடுக்கும்போது, மேடையின் மேல் நீங்கள் எதிர்பார்ப்பது போன்றுள்ளதொரு தூண்டுதலின்றி தானாக நிகழ்கிற சுகமளித்தலைத்தான் நான் சொல்ல வருகிறேன். அங்கே நூற்றுக்கணக்கான குற்றம் கண்டு பிடிப்பவர்களும், அதை குறைகூறுவதற்காக செய்தித்தாள்களும் மற்ற எல்லாமே அமர்ந்து கவனித்துக்கொண்டிருப்பார்கள். எனவே... இப்பொழுது, அவர்கள் இங்கிருந்து புறப்பட்டு போய் இந்தவரத்தை விட்டு அப்புறமாக போனபிறகு நான் பொறுப்பாளி அல்ல. நான் பொறுப்பல்ல. ஆனால் குருடாயிருப்பவர்கள் வேதாகமத்தை வாசிக்க முடியும் அளவுக்கு மேடையின் மேல் குருடான கண்களைத் திறக்கும் எந்த வல்லமையும், அவர்கள் தொடர்ந்து விசுவாசித்துக் கொண்டிருப்பார்களானால், அவர்களால் அதை எல்லா நேரமும் வாசிக்க முடியும். அது விசுவாசமாக உள்ளது. நீங்கள் விசுவாசத்தை இழக்கும்போது... நீங்கள் ஒருகூட்ட அவிசுவாசிகளோடு வெளியே போய், அவர்கள், 'அங்கே அதில் எதுவுமில்லை' என்று கூறும்போது, சாத்தான் உங்களிடம் பொய்சொல்ல தொடங்குகிறான், அப்பொழுது நீங்கள் தொடக்கத்தில் எங்கேயிருந்தீர்களோ அந்த ரகத்திலேயே சரியாக திரும்பவும் விழுந்துவிடுவீர்கள். அது... நீங்கள்... 52. யாரோ ஒருவர், 'தெய்வீக சுகமளித்தல் எவ்வாறு... அது... அது எல்லா நேரமும் நீடிக்குமா?' என்று கேட்கிறார். விசுவாசமானது தொடர்ந்து நீடித்திருக்கும் காலம் வரை அதுவும் நீடித்திருக்கும். இரட்சிப்பும் அதேவிதமாக விசுவாசம் நீடித்திருக்கும் காலம் வரையில் நீடித்திருக்கும். இனிமேலும் நீங்கள் இரட்சிக்கப்பட்டவர்களல்ல என்று நீங்கள் உணரும்போது, நீங்கள் இரட்சிக்கப்படவில்லை. கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு தான் நீங்கள் இரட்சிக்கப்படுகிறீர்கள். அது சரிதானா? நீங்கள் பீடத்தை நோக்கி வரும்போது, என்ன செய்கிறீர்கள்? நீங்கள் உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு உங்களை மன்னிக்கும்படி தேவனிடம் கேட்கிறீர்கள். அப்போது, உங்கள் இருதயத்தில்... இப்பொழுது அதைப் பெறுகிறீர்கள்! அவர் உங்களை மன்னித்து விட்டார் என்று நீங்கள் விசுவாசித்தாக வேண்டும். அது சரிதானா? நீங்கள் அதை விசுவாசித்தாக வேண்டும். அதன்பிறகு நீங்கள் மேடையை விட்டு நடந்துபோகிறீர்கள். அப்பொழுது நீங்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டீர்கள் என்று நீங்கள் முதலில் அதை அறிக்கை செய்ய வேண்டும். நீங்கள் வெறுமனே அதை ஒரு மரக்காலின் கீழ் வைக்க முடியாது; அப்படியானால் நீங்கள் சரியாக அப்பொழுதே அதை இழந்துவிடுவீர்கள். நீங்கள் அதை அறிக்கைசெய்து, நீங்கள் சந்தோஷமா யிருக்கிறீர்கள் என்று எல்லாரிடமும் சொல்ல வேண்டும். இப்பொழுது, நீங்கள் வெளியே நடந்துபோகும்போது, யாரோ ஒருவர், 'அது உண்மையல்ல; நீ பீடத்தில் வெறுமனே உணர்ச்சிவசப்பட்டுவிட்டாய்' என்று சொல்லுவாரானால் என்னவாகும். 53. எத்தனை கிறிஸ்தவர்கள் இங்கே உள்ளேயிருக்கிறீர்கள்? நாங்கள் உங்கள் கரங்களைப் பார்க்கட்டும். சரி. ஓ, என்னே. நூறு சதவீதம் என்று நம்புகிறேன். சரி. உங்கள் ஒவ்வொருவரையும் தேவன் அதேவிதமாக, விசுவாசத்தினாலே தான் இரட்சித்தார். நீங்கள் இங்கு வந்து, இந்த வாரம் முழுவதும், அடுத்த வாரமும், ஒரு மாதமும் அழுது, ஜெபித்து, ஜெபித்து, அழுதுகொண்டிருக்க முடிந்தாலும், நீங்கள் விசுவாசத்தினாலே அவரை ஏற்றுக்கொள்ளும் வரையில், நீங்கள் இன்னும் ஒரு பாவியாகவே இருப்பீர்கள். அது சரிதானா? உங்களை இரட்சிப்பது உங்களுடைய அழுகையல்ல. உங்களை இரட்சிப்பது உங்கள் விசுவாசம் தான். சரி. அதன்பிறகு நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு, அதை விசுவாசிக்கும்போது, யாரோ ஒருவர், 'நீ வித்தியாசமான எதுவாகவும் தோற்ற மளிக்கிறாயா என்று பார்ப்போம். ஏன், உனக்கு இன்னும் பழுப்புநிற கண்கள் உள்ளன, நீ இருந்தது போன்று அப்படியே அதேவிதமாகவே தான் நீ-நீ இருக்கிறாய்' என்று சொல்லும்போது. நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று உங்களால் எதையும் காண்பிக்க முடியாது, நீங்கள் காணக்கூடாதவைகளைக் குறித்து சாட்சி பகருவது மாத்திரம் தான். நீங்கள் இரட்சிக்கப்பட்டுள்ளீர்கள் என்று உங்களுடைய விசுவாசம் கூறுகிறது. அதன்பிறகு நீங்கள்...?... நீங்கள் என்ன செய்கிறீர்கள். நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று விசுவாசியுங்கள்; அதன்பிறகு நீங்கள் இரட்சிக்கப் பட்டிருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்; அதன்பிறகு நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பது போன்று நடந்துகொள்ளுங்கள்; அதன்பிறகு இரட்சிக்கப்பட்டவர்களோடு கூட சேர்ந்துகொள்ளுங்கள்; அப்பொழுது அது நீதியாக கிரியைசெய்கிறது. அது சரியல்லவா? அதன்பிறகு நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று எல்லாரும் அறிந்தபிறகு. அதுசரிதானா? 54. நல்லது, நம்முடைய மீறுதல்களி னிமித்தமாக அவர் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். இயேசு நம்முடைய அறிக்கையின் பேரிலான ஒரு பிரதான ஆசாரியராயிருக்கிறார், எபிரெயர் 3:1. இப்பொழுது, 'பகிரங்கமாக கூறுதல்' என்ற அந்த வார்த்தையானது, 'அறிக்கை செய்தல்' என்ற அதேவிதமாகவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது பண்டிதர்களாகிய உங்களில் எவரும் அறிவீர்கள். அவர் பிரதான ஆசாரியராயிருக்கிறார். இப்பொழுது, இதோ அது இருக்கிறது, இஇப்பொழுது இதைப் புரிந்துகொள்ளுங்கள், சுகமடைய நீங்கள் இங்கே வர வேண்டும் என்பது கூட இல்லை! சரியாக நீங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கும் இடத்திலேயே நீங்கள் சுகமடைவீர்கள். அது சரியாக இப்பொழுதே நிகழக்கூடியதாயிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன், இக்கட்டிடத்திலுள்ள ஜனங்கள் சுகமடைவது என்பது, சரியாக, சரியாக இப்பொழுதே இங்கேயே சாத்தியம் தான். நான் அதைக் கண்டிருக்கிறேன். ஆயிரக்கணக்கானவர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கும் கட்டிடத்தில், ஒரு சக்கரநாற்காலியோ, ஒரு ஊன்றுகோலோ, அல்லது ஒரு குருடனோ, அல்லது ஒரு செவிடான மனிதரோ மீதியாக விடப்படாதிருந்த நேரத்தை நான் கண்டிருக்கிறேன். 55. ஒரு இரவு பேசிக்கொண்டிருக்கையிலி, தேவனாலே ஒரு அற்புதம் நிகழ்த்தப்பட்டதை அவர்கள் கண்டு, அப்படியே சரியாக அங்கேயே அவர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள், அப்போது வெறுமையாக இல்லாத ஒரு கட்டிலோ, சக்கரநாற்காலியோ, அல்லது எதுவுமே அங்கே இல்லாதபடி, அவர்கள் வெளியே நடந்துபோனார்கள்: அது இல்லினாயிலுள்ள வாண்டேலியாவில் (அது சரியே.) ஒரு பெரிய கூடார கூட்டத்தில் நிகழ்ந்தது. இப்பொழுது, அது இதோ இருக்கிறது, நண்பர்களே. அது... பாருங்கள், நீங்கள் அதைப் பெற்றுக்கொண்டால், நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருக்கிறீர்கள், ஏனென்றால் நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்று விசுவாசிக்கிறீர்கள். அப்பொழுது அதெல்லாம் தீர்க்கப்பட்டு விட்டது, ஏனென்றால் அவர் ஒரு பிரதான ஆசாரியராயிருக்கிறார். இப்பொழுது, கவனியுங்கள். அவர் உங்கள் அறிக்கையின் பேரில் பிரதான ஆசாரியராயிருக்கிறார். நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா? நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்று அறிக்கை செய்கிறீர்களோ, அவ்வாறு தான் நீங்கள் இருக்கிறீர்கள். எந்த மனிதனும் தான் எவ்வாறு ஜீவித்துக் கொண்டிருக்கிறான் என்று அவன் விசுவாசிப்பதைக் காட்டிலும் எந்த அதிக தூரமாகவோ, அல்லது எந்த உயரமான நிலையிலும் அவன் ஒருபோதும் ஜீவிக்கவே மாட்டான். எல்லா நேரமும் மது அருந்துவதைக் குறித்தே பேசிக்கொண்டிருக்கும் ஒரு மனிதனை எடுத்துக்கொள்ளுங்கள். அவன் குடிப்பதைக் குறித்தே பேசுகிறான்; குடிப்பதைப் பற்றியே அவன் சிந்திக்கிறான்; அப்போது அவன் சரியாக அந்த ரகத்திற்குள்ளே விழுந்துபோய், ஒரு குடிகாரனாக ஆகிவிடுகிறான். எப்போதுமே இழிவான காரியங்களைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதன்; அவன் ஆபாசமான காரியங்களையே பார்க்கிறான்; ஆபாசமான காரியங்களைக் குறித்தே சிந்திக்கிறான்; அசிங்கமானதை... தான் வாசிக்கிறான். 4 MINISTRY EXPLAINED ஊழியம் விவரிக்கப்படுதல் 3